வெற்றி தரும் தெய்வம் -ஆதிராஜகாளியம்மன்
நிரஞ்சனா
திண்டுக்கல் மாவட்டம், தெத்துப்பட்டியில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலை பற்றி இப்போது அறிந்துக் கொள்வோம்.
கன்னிவாடி மலை என்றும் பன்றிமலை என்றும் அழைக்கப்படும் இந்த பகுதியில் முன்னொரு காலத்தில் போகர், தன் சீடர்களுடன் கன்னிபூஜை செய்ய தன் கமண்டலத்தில் உள்ள நீரை ஒரு கல்லின் மேல் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்தார். அந்த பெண்ணை “கன்னிவாடி” என்று அழைத்து, அந்த கன்னிபெண்ணை தெய்வமாக பாவித்து பூஜையை சிறப்பாக செய்தார். இருந்தாலும் பூஜையை முடிப்பதற்குள் அன்னை புவனேஸ்வரியம்மன் தோன்றி பூமி தாயான தம்மை வணங்காமல் போகரே ஒரு கன்னி தேவதையை உருவாக்கி பூஜை செய்ததால் கடும் கோபம் கொண்டு போகருக்கு சாபம் தந்து பூஜையில் இருந்த அந்த கன்னிபெண்ணை மறுபடியும் கல்லாக மாற்றினார். இதுதான் “கன்னிவாடி” பெயர் காரணம்.
ஆவேசமாக மதுரைக்கு வந்த கண்ணகி
கண்ணகியின் கணவரை கள்வன் என்று தவறாக தீர்மானித்து தூக்கில் போட்டுவிட்டார் மன்னர் பாண்டிய நெடுஞ்செழியன். இந்த கொடுமைக்கு நியாயம் கேட்க மதுரைக்கு தலைவிரி கோலத்துடன் ஆக்ரோஷமாக அரசபைக்குள் நுழைந்தாள் கண்ணகி. கண்ணகியின் வாதத்தை கேட்டு தாம் ஒரு அப்பாவிக்கு பெரிய தீங்கிழைத்துவிட்டதை புரிந்துக்கொண்ட பாண்டிய மன்னர், “மீனாட்சி அன்னையே, சொக்கநாதா“ என்று கதறி அழுதபடி இறந்து போனார் மன்னர்.
இருந்தாலும் கோபம் அடங்காத கண்ணகி, மன்னன் மாண்டால் மட்டும் போதுமா? தவறான தீர்ப்பை தட்டி கேட்காத மதுரை மக்கள் மீதும் கோபம் அடைந்து மதுரைக்கும் சாபம் இட, மதுரை எரிந்தது. எரிந்து கொண்டிருக்கும் மதுரையை ஆவேசமாக பார்த்துக்கொண்டிருந்த கண்ணகியின் முன்பாக தோன்றினாள் மதுராபதி தெய்வம். “கண்ணகியே அமைதியாக இரு. பூர்வஜென்மவினையால்தான் நீ இந்த நிலைக்கு தள்ளப்பட்டாய். ஆகவே உன் கோபத்தை விட்டுவிடு.” என்றாள்.
அப்போது சொக்கநாதர் மதுராபதி தெய்வத்தின் முன் தோன்றி, “நீ மதுரைக்கு காவல் தெய்வம். அத்துடன் பாண்டிய வம்சத்திற்கும் குலதெய்வம். அப்படி இருக்கும்போது நீ உன் கடமையில் இருந்து தவறிவிட்டாய். பாண்டிய அரசனையும் உன்னால் காப்பாற்ற முடியவில்லை, மதுரை மாநகரத்தையும் உன்னால் காப்பாற்ற முடியவில்லை. என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறாய்?” என்று கோபமாக கேட்டார் சொக்கநாதர்.
அதற்கு மதுராபதி தெய்வம், “கண்ணகி மதுரைக்கு வரும் போது அவளிடம் நியாயம் இருந்தது. அதனால் நான் கண்ணகியை தடுக்கவில்லை. ஆனால் மதுரையை அவள் எரிப்பாள் என்று நான் எதிர்பார்க்கவி்ல்லை. இராவணன் விதி முடிவதற்கு அவள் தங்கையைதான் விதி பயன்படுத்திக் கொண்டது. அதுபோல, பாண்டிய மன்னனின் விதி முடிவதற்கு அவன் ஊழ் வினை கண்ணகியை பயன்படுத்திக் கொண்டது. அதனால் என்னால் தடுக்க முடியவில்லை.” என்றாள் சிவபெருமானிடம் மதுராபுரிதெய்வம்
“உன் வாதத்தை எம்மால் ஏற்க இயலாது. நீ உன் கடமையை செய்யாததால் உனக்கு இனி வழிபாடு கிடையாது. கோவில் கிடையாது. பாண்டிய நெடுஞ்செழியன் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்ததால் அவனுக்கு மறுபிறவி உண்டு. அடுத்த பிறவியில் அவனே உனக்கு கோவில் கட்டுவான்.” என்றார் சிவபெருமான்.
“அதுவரை நான் என்ன செய்வது.” என்று கலங்கினாள் மதுராபதி தெய்வம். அந்த தெய்வத்தின் மனஒட்டத்தை புரிந்துக் கொண்ட மதுரை சொக்கநாதர், “எமது கோயிலின் மேற்கு கோபுர வாசலில் துயில் கொள்ள கட்டளையிடுகிறேன்.” என்றார்.
இதனால் மதுராபதி அம்மன், போகர் தவம் செய்த கன்னிவாடி மலை என்கிற பன்றிமலை இடத்தில் சாபம் நீங்கி இருக்கிறார்.
இந்த மதுராபுரி ராஜகுடும்பத்திற்கு குல தெய்வமாக இருந்தாலும், ஆதி சிவனால் அருள் பெற்றதாலும் ஆதி ராஜகாளியம்மன் என்று இந்த அம்மனை அழைக்கிறார்கள்.
கண்ணகியின் நியாயத்திற்கு துணை இருந்த மதுராபதி தெய்வம், பக்தர்களின் நியாயமான வேண்டுதல்களுக்கும் துணை இருப்பாள்.
ஆதி ராஜகாளியம்மனுக்கு பூமாலை அணிவித்தால் வசந்தமான வாழ்க்கை அமையும்.
நீதிக்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் இந்த அம்மனை வணங்கினால் என்றென்றும் அவர்களுக்கு துணை இருந்து உயர்ந்த வாழ்வை தருவார்.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
CLICK FOR VIDEO PAGE
editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.