அன்னாபிஷேகம்
நிரஞ்சனா
“சோறு கண்ட இடம் சொர்கம்” என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன?
சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான், “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றார்கள்.
சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் நாள் அன்று சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு செய்யப்டுகிற அன்னாபிஷேகத்தை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம்.
வீ்ட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம்.
சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
பொருள்: சிவபெருமான் எப்போதும் என் மனத்தில் வீற்றிருப்பதால், அவனது திருவருளை துணையாக கொண்டு, அவனது திருவடி தொழுது நான் ஆனந்தம் அடைதல் பொருட்டும், என் பழவினைகள் கெடுதல் பொருட்டும், எப்போதும் நிலைத்துள்ள சிவ தத்துவங்களை உணர்ந்து ஓதுவேன்.
ஓம் நம சிவாய – சிவாய நம!
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved