யுத்தம் – கிரகயுத்தம் 10-5-2011 வரை செவ்வாய் சஞ்சாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
(ஸ்ரீதுர்கை உபாசகர்)
இந்த கிரக சஞ்சாரத்தை “கிரகயுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக சூரியன் – செவ்வாய் இணைந்தாலோ நேர் பார்வை செய்தாலோ அது “கிரகயுத்தம்“ ஆகிறது. இதனால் உலகில் அநேக இடங்களில் எப்போதும் கலவரங்கள் நடக்கலாம் – இயற்கை சீற்றங்கள் நிகழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அரசாங்கத்தின் அதிபதி. அவன் செவ்வாயோடு இணைந்தால் அரசாங்கத்திற்கு அவதிகள் பல நேரலாம். பெரும் தலைவர்களுக்கு இது சோதனையான காலம்.
இன்னும் கூற வேண்டும் என்றால் புரட்சி – போராட்டங்களுக்கு இந்த கிரகசேர்க்கை காரணமாக இருக்கும். மார்ச் 8- ம் தேதி சுக்கிரன் கும்பத்தில் சஞ்சரிப்பதால் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யலாம்.
அரசியல் புகழ் பெற்ற சிலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படலாம். இதனை நவகிரகங்கள் நமக்கு உணர்த்துகிறது. அதாவது இரண்டு கிரங்களோடு சுக்கிரன் கூடுவதால் குழப்பங்கள் ஏற்படுகிறது. இது 10-5-2011 வரை செவ்வாய் சஞ்சாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள். இதற்கு பரிகாரமாக செவ்வாய் பகவானை வேண்டுவது ஒன்றுதான் ஒரே வழி.