Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

பில்கேட்ஸின் பிரம்மாண்ட மாளிகை… ரூ.758 கோடி மதிப்பு!

bill gates houseஉலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில்  இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம்  கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி  கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி  செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218  ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு  பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர  மாளிகையாகத்தான் இருக்கும். வாஷிங்டன் எஸ்டேட் பகுதியில் உள்ள  இவரது வீட்டின் பெயர் ‘சனாடு 2.0’. 66 ஆயிரம் சதுர அடி பரப்பில்  அமைந்துள்ள பில்கேட்ஸ் வீட்டை கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆனதாம்.  இந்த இடத்தை கடந்த 1988ம் ஆண்டு ரூ.12 கோடிக்கு வாங்கி ரூ.386  கோடி செலவழித்து இந்த வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின்  தற்போதைய மதிப்பு ரூ.758 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு  வரியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.6 கோடி கட்டுகிறார்.

அந்த ஆடம்பர  மாளிகையின் வியக்கத்தகு வசதிகள் பற்றி இதோ சில தகவல்கள்:

* இந்த வீடு கட்ட 500 வயது டக்லஸ் பிர் மரங்கள்  பயன்படுத்தப்பட்டன.

* இந்த மாளிகையில் பொருத்தப்பட்டுள்ள ஹைடெக் சென்சார்கள்  அறைகளின் வெப்பம் மற்றும் விளக்குகளின் ஒளி ஆகியவற்றை நம்  விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும். இங்கு வரும் விருந்தினர்களுக்கு  தனியாக பின் எண்கள் கொடுக்கப்படும். அவர்கள் பதிவு செய்யும்  வெப்பம் மற்றும் விளக்குகளின் ஒளி அளவுக்கு ஏற்ப, விருந்தினர்கள்  செல்லும் இடங்கள் எல்லாம் செட்டிங்ஸ் தானாக மாறும். அதேபோல்  வால்பேப்பரின் பின்புறம் உள்ள ஸ்பீக்கர்களில் இசை ஒவ்வொரு  அறையாக தொடர்ந்து வரும்.

* வீட்டை சுற்றியுள்ள மரம், செடிகளே அறைகளின் வெப்பநிலையை  மிதமாக வைத்திருக்கும்.

* வீடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் திரைகள்தான்.  சுவரில் உள்ள கலை ஓவியங்கள், படங்கள்  பிடிக்கவில்லையென்றால்,  பட்டனை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

* வீட்டையொட்டி 60 அடி நீள நீச்சல் குளம். அங்கும் இசைகளை  கேட்கும் வசதி.

* வரவேற்பு அறையில் 200 விருந்தினர்கள் அமரலாம். 150 பேர்  விருந்து சாப்பிடும் பெரிய அரங்கம் இருக்கிறது. இந்த மாளிகையில்  மொத்தம் 24 பாத்ரூம்கள். அதில் 10 பாத்ரூம்கள் சகல வசதிகளுடன்  கூடியது.

* மாளிகையின் வெவ்வேறு பகுதிகளில் 6 சமையலறைகள் உள்ளன.  எந்த நேரமும் விருந்துக்கு தயாராக ஊழியர்கள் உள்ளனர்.

* இங்குள்ள பிரம்மாண்ட நூலகத்தில், பில்கேட்ஸ் அதிக விலைக்கு  ஏலத்துக்கு வாங்கிய புத்தகங்கள், பிரபலங்களின் கையால் எழுதிய  ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* வீட்டில் உள்ள திரையரங்கத்தில் 20 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.  இங்கு பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரம் உட்பட சகல வசதிகளும்  உள்ளன.

* 23 கார்களை நிறுத்தும் அளவுக்கு பெரிய கார் பார்க்கிங். இது தவிர 10  கார்கள் நிறுத்தும் அளவுக்கு அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்.

* வீட்டை சுற்றி செயற்கை நீரோடை. அதில் மீன்கள் துள்ளி  விளையாடும். வீட்டையொட்டி அமைந்துள்ள ஏரிக்கரையில் மெதுவான  பீச் மணல். கரீபியன் கடல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவை.  ஏரியில் படகு சவாரி செய்யலாம்.

* இது தவிர விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் என ஒரு  மினி சொர்க்கமே பில்கேட்ஸ் மாளிகைக்குள் இருக்கிறது.

Posted by on Nov 10 2014. Filed under உலக செய்திகள், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »