கருணை செய்யும் “கர“ வருடம்
கணித்தவர்,
V.G.கிருஷ்ணாராவ்
(98411 64648)
சித்திரை மாதம் 1-ம் தேதி ஆங்கிலம் 14.04.2011. வியாழ கிழமை கர வருடம் மகம் நட்சத்திரம், மிதுன லக்கினம் சிம்ம இராசியில் பிறக்கிறது. நம் இநதியாவின் புகழ் ஜெகம் எங்கும் பரவ போகிறது. மக நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் நம் நாட்டை ஜெகமே அன்னர்ந்து பார்க்க போகிறது. லக்கினத்திற்கு 4-ல் சனி. அதை செவ்வாய்,குரு,புதன் பார்வை செய்வதால் தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் உண்டு.
ரியல் எஸ்டேட் வியபாரம் கொடி கட்டி பறக்கும். லக்கினத்திற்கு 9-ல் சுக்கிரன் (திரிகோணத்தில்) இருப்பதால் பெண்கள் செல்வாக்கு,கல்வி,உத்தியோகம் பல மடங்கு உயரும்.
லக்கினத்திற்கு 2-க்குடைய சந்திரன் 5-க்குடைய சுக்கிரனால் பார்க்கப்படுவதால் பெண்கள் பெருமை அடையும் வருடம் இது.
கேது லக்கினத்தில் இருப்பதால் தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆனால் அதை சனி 10-ம் பார்வையாக வக்கிரம் பெற்று பார்ப்பதால் புது புது வியாதிகள் தோன்றும்.
அன்னிய விரோதங்கள் சூழ்ச்சிகள் சனியால் முறியடிக்கப்படும். அன்னியர்கள் இனி அடக்கி வாசிப்பார்கள். பொதுவாக லக்கினத்தில் கேது, 4-ல் சனி, 7-ல் ராகு, 10-ல் செவ்வாய்,புதன் குரு, இப்படி கேந்திரங்களில் எல்லாம் கிரகங்கள் இருந்தால் யோகமான காலகட்டம் இது.
8-க்குடைய சனி 4-ல் வக்கிரம் பெற்றதால் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணும்.
சுக்கிரனை சந்திரன் பார்வை செய்வதால், போதும் போதும் என்றளவிற்கு மழை கொட்டி தீர்க்கும். வெள்ளபெருக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
லக்கினத்திற்கு 11-ல் சூரியன். மருத்துவ துறை புதிய சாதனை செய்யும். வாகனங்கள் இயந்திரங்கள் விலை உயரும். கலைத்துறைக்கு பொற்காலம். அழகு சாதனம், துணிமணிகள் ஏற்றுமதி பெருத்த லாபம் தரும்.
குரு சேர்க்கை அல்லது பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். இயற்கை சீற்றங்கள் அத்தனையும் குருவால் சற்று சாந்தப்படுத்தப்படும்.
பொதுவாக இந்த “கர“ வருடம் நாட்டு மக்களுக்கு பெரும் நன்மையை தன் கருனையால் வாரி வழங்கும்.
எந்தெந்த இராசிகளுக்கு நன்மைகள் – தீமைகள் செய்யும் என்பதை வருகிற 7-ம் தேதி அன்று விரிவாக பார்ப்போம்.