Monday 18th November 2024

தலைப்புச் செய்தி :

திருக்கோயில் உணவு – பிணி தீர்க்கும் மருந்து

நிரஞ்சனா 

மகரிஷி துர்வாசர் முனிவருக்கு அதிகமான பசி ஏற்பட்டது. எங்கு சென்று சாப்பிடுவது என்ற கவலை அவரை வாட்டியது. அப்போது அவர் பார்வையில் ஒரு குடிசை தென்பட்டது.  அந்த குடிசையின் அருகில் சென்று அங்கு வசிக்கும் முத்கலர் என்பவரிடம் “எனக்கு பசியாக இருக்கிறது“ என்றார். ஆனால் முத்கலரோ தன் குடும்ப பசிக்கு அவர் தினமும் வயல்வெளிகளில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை  ஒவ்வொன்றாக பொருக்கி சேமித்து பத்து நாட்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவார்கள்.

அந்த சாப்பாட்டையும் துர்வாச முனிவர் ஒரே நிமிடத்தில் எல்லாவற்றையும் யாருக்கும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிட்டார். இதை கண்ட முத்கலரின் குடும்பத்தினர் சிறிது கூட வருந்தாமல் இன்முகத்துடன் துர்வாச முனிவரை உபசரித்தார்கள். இப்படியே பல தடவை முத்கலர் வீட்டில் சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் துர்வாசர்.

“பிச்சை எடுக்குமாம் பெருமாளு… அதை பிடுங்கி தின்னுமாம் அநுமாரு…“ என்கிற கதையாக வயலில் சிந்தும் நெல்மணிகளை சேகரித்து  பத்து நாட்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவார்கள். ஆனால் அதையும், “சில நாட்களாக இந்த முனிவர் வந்து உணவு மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுகிறாரே… இது அடுக்குமா? என்று தன் மனகுறையை கூறி கொண்டு இருந்தாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி முத்கலர் மனைவியிடம்.

 பெருமையான வாழ்க்கை

ஆனால் அதை பற்றி கவலைப்பட்டு அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் முத்கலர் மனைவி. “பொருத்தால் பூமி ஆள்வார்“ என்பதற்கு ஏற்ப ஒருநாள் சொல்லி வைத்தது போல் துர்வாச முனிவர் வந்தார். “உங்களின் நல்ல குணத்தை சோதிக்கதான் யாம் இத்தனை கஷ்டத்தை கொடுத்தோம். அதை எல்லாம் பொருமையாக ஏற்று உங்களுக்கு பெருமை சேர்தது கொண்டடீர்கள். இனி நீங்கள் சொர்கலோகமான வாழ்க்கையை பெற்று வாழ் வாங்கு வாழ்வீர்கள்“ என்று ஆசி வழங்கினார் துர்வாசமுனிவர். முனிவரின் நல்லாசி பலித்தது. முத்கலர் வாழ்க்கையில் பெரும் அளவில் உயர்ந்துவிட்டார். துர்வாசரையே தம் குல தெய்வமாக வணங்கி போற்றினார்.

அதனால்தான் நாம் சாப்பிடும் போது யாராவது வந்தால் அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும். உணவை பகிர்ந்து கொடுக்காமல், தாமே சாப்பிட்டு வறுமைக்கு ஆளானோர் பலர்.

அதில் ஒரு சம்பவம் இதோ..

சிறுவனாக இருந்த கிருஷ்ணனுக்கும் குசேலருக்கும் அவல் தயார் செய்து குசேலரிடம் கொடுத்தனுப்பினார் குரு பத்தினி. ஆனால் குசேலர், கிருஷ்ணனுக்கு பாதியை கொடுக்காமல் எல்லாவற்றையும் அவரே சாப்பிட்டார். இந்த விஷயம் குரு தேவருக்கு தெரிந்து குசேலரின் தவறை சுட்டிகாட்டி, “தவறு செய்து விட்டாயே குசேலா… அதனால் உனக்கு தீராத கஷ்டம் வருமே“ என்று கவலையோடு சொன்னார். குருவின் சொல் பலித்தது. குசேலன் வறுமையில் வாடிபோனான். பிறகு பல வருடம் கழித்து கிருஷ்ணனுக்கு அவல் கொடுத்து செய்த பாவத்தை போக்கி கொண்டான் குசேலன். சாப்பிடும் போது யாராவது வந்தால் அவர்களுக்கும் பங்கிட்டு சாப்பிட வேண்டும்.

வியாதிகளுடன் பிறந்த குழந்தை

இப்படி அன்னதானத்தை பற்றி தெரிந்து கொண்ட நாம், திருக்கோயில்களில் வழங்கும் பிரசாதம் அல்லது அன்னதானத்தின் மகிமைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்நாடக தேசத்தில் பானு என்ற நகரத்தில் வல்லவன் என்ற ஒர் அரசன் ஆண்டு வந்தான். அவனின் மனைவி கமலை. இவர்களுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே அது பல வியாதிகளுடன் பிறந்தது. அந்த குழந்தை எது சாப்பிட்டாலும் ஆகாது. பசியும் இருக்காது. குழந்தை பார்க்க பரிதாபமாக மெலிந்து போனது. இதனால் பல மருத்துவர்களை அணுகினார்கள். எந்த நல்ல பலனும் கிடைக்கவில்லை. “பிள்ளைக்கு தோஷம் பிடித்து உள்ளது. அதனால் நீங்கள் பல திருக்கோயில்களுக்குச் சென்று வந்தால் குணம் ஆகும்“ என்றார் ஒரு முனிவர். அவரின் வாக்கை இறைவனின் திருவாசகமாக நம்பினாள் அரசி கமலை. மகாராணி கமலை குழந்தையை எண்ணற்ற ஆலயங்களுக்கு அழைத்துச் சென்றாள். ஒருநாள் குழந்தைக்குப் பசி ஏற்பட்டது. பசி என்று சொல்லாத தன் குழந்தை பசி என்று சொல்கிறதே என்று அரசி மகிழ்ந்தாலும் அந்த சமயத்தில் எந்த உணவும் அவளிடம் கைவசம் இல்லை. என்ன செய்வது? என்ற துயரத்தில் இருந்தபோது, ஒரு கோவிலில் அன்னதானம் செய்து கொண்டு இருந்தார்கள். தான் ஒரு மகாராணி என்பதையே மறந்து குழந்தையின் பசியை மனதில் கொண்டு கோவிலில் கொடுக்கும் உணவை தன் பிள்ளைக்குக் கொடுத்தாள் அரசி. என்ன ஆச்சரியம்? வியாதிகள் கூடிக் கொண்டு இருந்த பிள்ளையின் உடல் படிபடியாக நல்ல முன்னேற்றம் பெற்றது. ஆலயத்தின் பிரசாதமாக வழங்கப்பட்ட உணவின் மகத்துவத்தை தெரிந்து கொண்டாள் அரசி கமலை.

 திருக்கோயில் உணவு பிணி தீர்க்கும் மருந்து

காசியில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தத் கொடுமையை பார்த்து, காத்யாயன மகரிஷிக்கு மகளாக பிறப்பெடுத்தாள் அன்னை ஆதிபராசக்தி. காத்யாயனிதேவி காசியில் வாழும் மக்களுக்கு, இல்லை என்று சொல்லாமல் உணவை வாரி வாரி வழங்கி கொண்டிருந்தாள். இந்த தகவல் அரசனுக்கு தெரிந்து, “அந்த உணவை அரண்மனைக்கு எடுத்து வாருங்கள்“ என்றார். அரசனாக இருந்தாலும் கோயிலுக்கு வந்துதான் சாப்பிட வேண்டும்“ என்று அரண்மனை ஆட்களிடம் சொல்லி அனுப்பினாள் பராசக்தி.

பிறகு அரசனும் அவனுடைய சேவகர்களும் ஆலயத்திற்கு வந்து உணவு சாப்பிட்டார்கள். “தாயே பஞ்சத்தில் வாடும் இந்த ஊரில் நீங்கள் எவ்வாறு உணவு கொடுக்கிறீர்கள்?“ என்றான் அரசன்.

“எம்மை யார் என்று தெரியவில்லையா?“ என்றாள் காத்யாயனி. இறைவனை வேண்டி நன்கு கவனித்து பார்த்த மன்னருக்கு காத்யாயனி, தாம் வணங்கும் காசி விசாலாக்ஷி அன்னபூரணியாகக் காட்சி தருகிறாள் என்பதை உணர்ந்து அதிர்ந்து போனார் அரசர்.

“எம்மிடமே உணவு எப்படி வந்தது என்ற கேள்வியா?“ என்று சிரித்தாள் மகாசக்தி அன்னபூரணிதேவி. அடுத்த நிமடம் ஆலயத்தில் சாப்பிட்ட மன்னனின் ஊரில் மழை பொழிந்தது. வறுமை நிலை விலகியது.

“மண்ணை ஆளும் மன்னனுக்கும் நேரம் நன்றாக இருந்தால்தான் ஊர் மக்கள் பொன்னை ஆள்வார்கள்“ என்ற சித்தர் வாக்கு பொய்யாகுமா?  

தோஷங்களும் பாவங்களும் போகவே அன்னதானத்தின் மகத்துவத்தையும், ஆலயத்தில் சமபந்தி என்ற உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.

 © 2011 bhakthiplanet.com All Rights Reserved

Posted by on Apr 1 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

1 Comment for “திருக்கோயில் உணவு – பிணி தீர்க்கும் மருந்து”

  1. வசந்தா கார்த்திகேயன்

    Bhakthi planet -ல் புதிய ஆன்மிக விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. பயன் உள்ளதாகவும் இருக்கிறது. கோயில்களில் அன்னதானம் பார்த்திருக்கிறேன். ஆனால் சாப்பிட்டதில்லை. இப்போதுதான் அது எவ்வளவு புண்ணியம்தரும் விஷயம் என்பதை தெரிந்து கொண்டேன். Thanks to Niranjana madam.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech