Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ஸ்ரீ சக்கரத்தை டாலராக கழுத்தில் அணியலாமா?; இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

கேள்வி :-  எனது வருமானம் அனைத்தும் எனது கணவரால் வீணாகிக் கொண்டிருக்கிறதுதினமும் பணம் கேட்டு நச்சல் செய்து கொண்டே இருக்கிறார். எனது வாழ்க்கை இனி எப்படி இருக்கும். எனது குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும். மேலும் அவருக்கு  நிலையான தொழில்,வருமானம் இல்லை.இதற்கு என்ன காரணம்?இதை மாற்ற என்ன பரிகாரம் செய்யலாம்?

-லோகநாயகி வெங்கடேசன்

பதில் :-  மேஷ இராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தள்ளீர்கள். 22.12.2012-க்கு பிறகு தங்களுக்கு பிரச்னைகள் குறையும். தற்போது இராகுதிசையில்-இராகு புக்தி நடப்பதால் சிரமம் இருக்கத்தான் செய்யும். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பிரதி வியாழன் தோறும் விநாயகர் கோயில் சென்று விளக்கேற்றி வந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

கேள்வி :-  அன்புள்ள அய்யா. என் ஜாதகம் இணைத்துள்ளேன். சில ஜோதிடர்கள் எனக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்படி ஏதேனும் தோஷம் என் ஜாதகத்தில் உள்ளதா? என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.?

-பிரியா

பதில் :- உங்கள் ஜாதக கிரக நிலைகளின்படி செவ்வாய் தோஷம் இருக்கிறது. இருந்தாலும், குருவின் பார்வை இருப்பதால் தோஷம் பாதிக்காது. குரு மங்கள யோகம் இருப்பதால் திருமண வாழ்க்கை நன்றாகவே அமையும்.

கேள்வி :- அய்யா. எனக்கு என்ன பிசினஸ் லாபம் கிடைக்கும். என் பெயர் “A.ELANGOVAN”    என் பெயரை எந்த கிரக ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.? உங்கள் சேவையை என் மனதார பாரட்டுகிறேன். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

A.இளங்கோவன்

பதில் :-  உங்களின் பிறந்த தேதி 17. அதாவது சனியின் ஆதிக்கத்தில் பிறந்துள்ளீர்கள். சனிக்கு யோக்க்காரகன் சுக்கிரன். ஆகவே தங்கள் பெயரை ‘A.ELANGHOVAN’ என்று அமைத்தால் நல்லது. Agencies  லாபம் தரும்.

கேள்வி :-  மதிப்பிற்குரிய அய்யா  வணக்கம். எனது பெயர் பிரியதர்ஷினி. நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை ஒரு பெரிய கல்லுரியில்  முடித்து வேலைக்காக காத்து கொண்டிருக்கிறேன். படித்து கொண்டிருக்கும் போதே ரெண்டு பெரிய நிறுவனங்களிள் வேலைக்காக தேர்வானேன். ஒரு வேலைக்கான அழைப்பு ஜூன் 23 ஆம் தேதி இருந்தது. ஆனால் எனது அண்ணன் மற்றும் பெற்றோரின் ஆசை படி நான் அந்த நிறுவனத்தில் சேரவில்லை. இரண்டாவது தேர்வான நிறுவனத்தில் வேலைக்கு சேர முடிவெடுத்து காத்து இருக்கிறேன். ஆனால் இன்னும் வேலைக்கான அழைப்பு வரவில்லை எனது ஜாதகத்தை இரண்டு ஜோசியர்களிடம் காட்டியதற்கு எனக்கு வேலை கிடைக்காது என கூறிவிட்டனர். எனக்கு மிகுந்த வருத்தமாக வுள்ளது. எனக்கு வேலை கிடைக்குமா எனவும் எனது எதிர்காலம் பற்றியும் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். வேலைக்கான ஆர்டர் இன்னும் வராமல் இருப்பது மிகவும் கவலை தருகிறது.

-பிரியதர்ஷினி

பதில் :- கன்னி இராசி, மீன லக்கினத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தற்காலம் இராகு திசையில் சனி புக்தி நடைப்பெறுகிறது. லக்கினத்திற்கு 10-ல் சனி இருப்பதால் வேலை வாய்ப்பு அமையும். 22.12.2012 ராகு-கேது பெயர்ச்சிக்கு பின் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும். எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கேள்வி :-  அன்புள்ள அய்யா. எனக்கு 14 வருடங்கள் ஆட்டோமொபைல் துறையில் அனுபவம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜுலை மாதம் நான் ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். ஆனால் அங்கே அவர்கள் தந்த மனஉளைச்சல் காரணமாக வேலையில் இருந்து நின்றுவிட்டேன். நான் 12.11.2011 முதல் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது புதிய இடத்தில் வேலை கிடைக்கும். 14 வருடங்களாக நிரந்தர தொழில் அமையாமல் கஷ்டப்படுகிறேன்.

-எம்.சரவண குமார்

பதில் :-  கும்ப இராசி, கும்ப லக்கினத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தற்காலம், சனி திசை, குரு புக்தி 07.07.2014 வரை இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் சனி, கேதுவுடன் இணைந்ததால் முன்னேற்றத்தில் தடை ஏற்படுகிறது. பிரதி சனிகிழமைதோறும் சனி பகவான் சந்நதியில் விளக்கேற்றி வழிபாடு செய்து வாருங்கள். 05.01.2013-க்குள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்

கேள்வி :- அய்யா. துல்லியமானது வாக்கியம் பஞ்சங்கமா – திருக்கணித பஞ்சாங்கமா? என் பிறந்த தேதி 30.03.1985 5.50 A.M. திருச்சி. என் இராசி லக்கினம் என்ன? என் நட்சத்திரம் திருவாதிரையா புனர்பூசமா?

-ஸ்ரீராம்

பதில் :-  எதிர்கால பலன்கள் துல்லியமாக அறிய திருக்கணித பஞ்சாங்கம் சிறந்தது. மிதுன இராசி – மீன லக்கினத்தில் பிறந்துள்ளீர்கள். ஜென்ம நட்சத்திரம் – திருவாதிரை.

கேள்வி :-  வணக்கம். பிறந்த தேதி 22.02.1990. 11.55 PM. மதுரை. எனக்கு மாப்பிள்ளை பார்கிறார்கள் , நான் எப்பொழுது திருமணம் செய்தால் நன்றாக இருக்கும்?என்னுடைய கல்வி மற்றும் தொழில் பற்றி கூறவும்.

-ராஜேஸ்வரி

பதில் :-   மகர இராசி, விருச்சிக லக்கினம், உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு தற்காலம் இராசிக்கு 10-ல் சனி இருப்பதால், 2 வருடங்களுக்குள் திருமணம் நடைப்பெற சாதகமான கிரக நிலைகள் உள்ளது. 10-ம் அதிபதி 4-ல் இருப்பதால் உயர்கல்விக்கு வழி வகுக்கும். Electronics or Accounts தொழில்கள் ஏற்றம் தரும். வாழ்த்துக்கள்.

கேள்வி :- ஸ்ரீ சக்கரத்தை டாலராக செய்து கழுத்தில் அணியலாமா ?
திருமணமானவர்கள் அணியலாமா ?

-அருள்முருகன்

பதில் :-   ஸ்ரீ சக்கரத்தை டாலராக கழுத்தில் அணியலாம். இரவில் கழுத்தில் அணியக் கூடாது. தீட்டு உள்ள வீட்டுக்குள் செல்லக் கூடாது. ஸ்ரீசக்கர மந்திரத்தை தினமும் ஜபிக்க வேண்டும்.

***********************************************************************************

ஜோதிடம் – ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

இது ஒரு இலவச சேவையாகும்.விரிவான பலன்களை அறிய கட்டண சேவையை பார்க்கவும்

உடனடியாக 3 நாட்களுக்குள் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவை பார்க்கவும்.

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 10 2012. Filed under Headlines, இலவச ஜோதிட கேள்வி பதில், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »