இராஜயோகம் தரும் சிவலிங்கம்
நிரஞ்சனா
வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள்.
சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி அடித்தார்கள் அசுரர்கள். பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் நிலையை நினைத்து வருந்தினார்கள். கடும் போரை தொடங்கினார்கள். அது ஆண்டுக்கணக்கில் நடந்த பிறகே அசுரர்களை அழிக்க முடிந்தது. சிவலிங்கத்திற்கு பூஜை செய்பவர்களை எந்த மந்திர தந்திர சக்தியாலும் வெல்ல முடியாது.
ஸ்ரீ ராமரும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்த பிறகுதான் தன் பட்டாபிஷேகத்தை நடத்தினார் என்கிறது புராணம்.