வீட்டின் தலைவாசலுக்கு ஆயுட்காலம் எவ்வளவு? | What is the lifetime of a house’s main door?
வாஸ்து சாஸ்திர நிபுணர்
Consultation: 9840675946
எந்த ஒரு கட்டடத்திற்கும் தலைவாசலே முதன்மையாக இருக்கும். அதிக பணச் செலவில் கட்டப்படும் வீட்டுக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் தலைவாசல், குறைந்த பொருட்செலவில் கட்டப்படும் வீடுகளுக்கு அதற்கேற்ப அழகுடன் தலைவாசல் என்று மாறுப்பட்டாலும், தலைவாசல்தான் வீட்டின் தலைகவசமாக இருக்கிறது. எந்த ஒரு துஷ்டசக்தியும் நுழைந்துவிடாமல் தடுத்துக்காத்திடும் தன்மை நல்ல இடத்தில் அமையப்பெற்ற தலைவாசலுக்கு நிச்சயமாக உண்டு.
ஒரு குடும்பத்தின் ஏற்றதாழ்வுகளுக்கும் அந்த வீட்டின் தலைவாசலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு வாசல் அமைப்பதே வழக்கம். ஆனாலும் அந்த வீட்டின் கட்டட அமைப்புக்கு இந்த இடத்தில் அமைக்கும் வாசல்தான் நல்லதா? என்பதை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து ஆராய்ந்து வைக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆயுட்காலம் என்பது மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் மட்டுமே உரித்தானதல்ல. நாம் கட்டுகிற கட்டங்களுக்கும் அல்லது வீட்டுக்கும் ஆயுட்காலம் இருக்கிறது.
அதைப்பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
இதில் மிகக் குறிப்பாக தலைவாசலுக்கும் ஆயுட்காலம் உண்டு என்பது நம் எத்தனை பேருக்கு தெரியும்?. ஆம் தலைவாசலுக்கும் ஆயுட்காலம் உண்டு. அதிலும் குறைவான ஆயுட்காலம்.
வெறும் முப்பது ஆண்டு காலம்தான் தலைவாசலுக்கு ஆயுட்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாம் என்னதான் ஆடம்பரமாக வீட்டை கட்டி இருந்தாலும், தலைவாசலுக்கு உரிய ஆயுட்காலம் முடிந்த பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அந்த வீட்டின் அதிர்ஷ்டம் குறைய தொடங்கும்.
அப்படி என்றால் ஒரு வீட்டுக்கோ அல்லது கட்டத்திற்கோ உள்ள ஆயுட்காலம், தலைவாசலுக்கு உள்ள ஆயுட்காலத்தால் பாதிக்கப்படுமா என்றால், கட்டாயம் பாதிப்புக்கு உள்ளாகும்.
சரி, தலைவாசலுக்கு உள்ள ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
சுமார் 30 ஆண்டுகள் என்கிறது மனையடி சாஸ்திரம். ஆனாலும் அந்த 30 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ஆண்டும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையோ தலைவாசலுக்கு பூஜை செய்வது கட்டாயம் என்று அறிவுறுத்தப்படுகிறது. (தலைவாசல் பூஜை வீடியோ பார்க்கவும்)
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2025 bhakthiplanet.com All Rights Reserved