Tuesday 24th December 2024

தலைப்புச் செய்தி :

ஜாதகப்படி திருமண தாமதம் ஏன்? | Reason for Delay Marriage

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான கட்டமாக ஒருவரின் வாழ்க்கையில் இருக்கிறது. கல்வியும், தொழிலும், உத்தியோகமும் எப்படி ஒருவருக்கு தேவையாக உள்ளதோ, முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ளதோ அதுபோல, திருமணம் என்பது வாழ்க்கையின் முழுமையை தருவதாக இருக்கிறது. கடின முயற்சியால் கல்வியறிவை பெற முடிகிறது. கடின முயற்சியால் தொழிலிலும், உத்தியோகத்திலும் உயர முடிகிறது. ஆனால் திருமண வாழ்க்கை என்பது ஒரு வரமாகவே உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டால், கல்வி சுமாராக இருந்தாலும், தொழில் சொற்ப லாபத்தில் நடந்தாலும், உத்தியோகம் நிலையாக இல்லாமல் போனாலும், திருமண பந்தத்தில் வாழ்க்கை துணையானவர் நமக்கு பக்கபலமாக நின்றாலும், சண்டை சச்சரவு ஏதும் இல்லாமல் வாழ்ந்தாலும், இருப்பதை கொண்டு மனதளவில் கோடீஸ்வரனை போலவே சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம்.

பலருக்கு திருமண வாழ்க்கை அமைவதே காலதாமதம் ஆகிறது. சிலருக்கு மிக இளம் வயதில் திருமணம் நடந்து, இளம் வயதில் பிள்ளைகளை பெற்று, தங்களின் நடுத்தர வயதினிலேயே பேரப்பிள்ளைகளை காணும் பாக்கியமும், அப்பேரப்பிள்ளைகளுக்கு திருமணத்தையும் நடத்தி பார்க்கும் பாக்கியமும் சிலருக்கே அமைகிறது. அதற்குதான் ஜாதக யோகம் வேண்டும் என்னிறது ஜோதிட சாஸ்திரம். சிலருக்கு என்னதான் வசதி வாய்ப்புகள் கொட்டி கிடந்தாலும், திருமண வாழ்க்கை மட்டும் அமைவதில்லை. பார்க்காத வரன் இல்லை, போகாத கோயில் இல்லை என்று திருமணம் கைக்கூடவில்லை என்று வருத்தத்தில் இருக்கும் பலரை பார்த்து வருகிறோம். அதற்கான காரணம் என்ன? திருமணத் தடை எதனால் ஏற்படுகிறது? என்பதை பற்றி ஜாதகப்படி திருமண தாமதம் ஏன்? என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்கா தேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது Bhakthi Planet YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

-ஆசிரியர்




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2024 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »