Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

குடும்பத்தை காக்கும் குலதெய்வம் – Family deity

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று சொல்வதுண்டு. பலர், மரணத்திற்கு பின்னர் தெய்வமாகின்றனர். சிலர் மட்டும்தான் வாழும்போதே தெய்வீக அம்சங்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஐயா பொன்முத்துராமலிங்கத் தேவர், மகான் ஸ்ரீஇரமணர் மகரிஷி, ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், ஷீரடி சாயிபாபா, புட்டபர்த்தி சாயிபாபா, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், திருவண்ணாமலை விசிறி சாமியார், வடலூர் ஸ்ரீராமலிங்க அடிகளார், ஸ்ரீசங்கராச்சாரியர் சுவாமிகள் என்று இன்னும் இன்னும் எத்தனையோ மனிதர்களாக பிறந்த தெய்வப்பிறவிகள் பலருண்டு. இவர்கள் அனைவரும் நமக்கானவர்கள். நம் நலனுக்காகவே துணை நின்றவர்கள், நிற்பவர்கள்.

இதில் குலதெய்வங்கள் என்பவர்கள் ஒரு குலத்தை காக்கும் பொறுப்புடைவர்களாக, அந்த குலத்திற்கு மட்டுமே காவலர்களாக தனித்து நிற்கிறார்கள்.

குலதெய்வம் என்பது என்ன? யார் அவர்கள்?

முன்னோரு காலத்தில் நம் குடும்பத்தில் பிறந்து, விருப்பங்கள் நிறைவேறாமல், எதிர்பாராமல் இறந்துப் போனவர்களும், தன் குடும்பத்தின் கௌரவத்தை காக்க தற்கொலை செய்துக்கொண்டவர்களும் அல்லது குடும்பத்தின் மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி மற்றும் இவர்கள் அனைவரின் திருமணத்தை பார்த்த புண்ணியம் பெற்றவர்களின் ஆன்மாவும் குலதெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது.

நான் கேள்விப்பட்ட சம்பவக்கதை ஒன்று உண்டு. அது என்னவென்றால், முன்னோரு காலத்தில் ஒரு குடும்பத்தில் இளம் வயதுள்ள பெண்ணொருத்தி இருந்தாள். அவள் மிகவும் அழகானவள். அவள் ஒரு சமயம் தன் வீட்டு பால்கனி போன்ற இடத்தில் நின்றிருந்த சமயத்தில், அந்த வழியாக சென்ற வெள்ளைக்கார அதிகாரி ஒருவன், அவள் அழகில் மயங்கி, அந்த பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டி, கடத்த முயற்சித்து இருக்கிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த இளம் பெண்ணை விஷம் வைத்து கொன்றுவிட்டனர். ஒருசில நாட்களில் அந்த வெள்ளைக்கார அதிகாரி மர்மமான முறையில் இறந்துவிட்டான். அதற்கு அடுத்த சில தினங்களில், அந்த இளம் பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடலாம் என்று யோசனை சொன்ன அந்த குடும்பத்தின் நபரும் மர்மமான முறையில் இறந்துவிட்டார். இவையெல்லாம் இறந்துபோன அந்த பெண்ணின் துர்ஆத்மாதான் செய்கிறது என்று நம்பிய அந்த குடும்பத்தினர், அவளுக்கு கோயில் கட்டி கன்னி தெய்வமாக வழிப்பட தொடங்கினார்.

அதன் பிறகு அந்த குடும்பப் பரம்பரையில் உள்ள எவரும் துர்மரணம் அடையவில்லை என்பது ஒரு பெரும் நிம்மதியாக கருதப்பட்டு, ஆண்டுதோறும் தவறாமல் குலதெய்வமாக வழிவழியாக வழிபட்டு வருகிறார்கள். இதுபோல இன்னும் எத்தனையோ விசித்திரமான, ஆச்சரியமான, அற்புதமான, அதிர்ச்சியான கதைச்சம்பவங்கள் ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் குலதெய்வ வழிபாடு என்பது மிக,மிக முக்கிய வழிபாட்டுக்கடமையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கிறது.

எந்த தெய்வத்தை மறந்தாலும் குலதெய்வத்தை மறந்து விடாதீர்கள்.

குடும்பத்தை காக்கும் குலதெய்வம்” என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்காதேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது Bhakthi Planet YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

-ஆசிரியர்




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2024 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »