Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

5 ம் பாவம் முட்டாள் அரசன் புத்தி பெண்மணி 5th House Planet. The foolish king and the wise lady.

ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் என்பது மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த 5-ம் பாவம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைத்தாலும், புத்தி கூர்மையை எடுத்துக்காட்டும் இடமாக இந்த 5-ஆம் இடமானது இருக்கிறது. வாழ்க்கையில் சோதனையான காலகட்டமாக இருந்தாலும், எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக யோசித்து ஒருவர் எதையும் செய்கிறார் என்றால், அவரின் ஜாதகத்தில் 5-ம் இடமானது சிறப்பாக இருக்கிறது என்று பொருள். இந்த சிறப்பான ஸ்தானத்தின் காரணமாக நிச்சயம் அத்தகைய ஜாதகர் வாழ்க்கையில் எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை அவர் தன் சமயோஜித்த புத்தியால் கடந்துவந்து வெற்றியடைவார். 5-ம் பாவம் எதனையெல்லாம் பேசுகிறது?. பூர்வ புண்ணியம், புத்தி, குழந்தைச் செல்வம், ஜாதகரின் தகப்பானரின் தகப்பனார் அதாவது ஜாதகரின் தாத்தா என இன்னும் பல விஷயங்களை பற்றி ஆராய்ந்து பேச முடியும். ஆனால் இந்த 5-ம் இடமானது வலுவாக இல்லை என்றால், ஜாதகத்தில் என்னதான் நல்ல யோகங்கள் இருந்தாலும் அதனால் சிறப்பு எதையும் தராது. மனித உடலுக்கு எப்படி மூளை முக்கியமோ அதுபோல் ஒரு ஜாதகத்திற்கு மூளையாக செயல்படுவது 5-ஆம் இடமாகும். அந்த வகையில், 5-ம் பாவம் முட்டாள் அரசன் புத்தி பெண்மணி என்கிற தலைப்பில் நமது ஸ்ரீதுர்காதேவி உபாசகர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள் சொல்லியதை நமது Bhakthi Planet YouTube சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். அதனை கண்டு, கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம்.

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

-ஆசிரியர்




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2024 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »