அயோத்தி ராமர் கோவில் : பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது அயோத்தி
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். முதல் வழிபாட்டுக்குப் பின்னர் ராமர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி. பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம்.
ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளி போன்று இன்று கொண்டாடுகிறது. ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்தேன். ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
RECOMMENDED POST
ராமர் பிறந்த தேதியும் ஆண்டும் இதுதான்.!