Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 8-ந் தேதி இராகு மீனத்திலும், கேது கன்னியிலும் பெயர்ச்சி ஆகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் 30-ஆம் தேதி திங்கள் அன்று இராகு புதன் சாரத்திலும், கேது செவ்வாய் சாரத்திலும் இராகு-கேது பெயர்ச்சி ஆகிறார்கள். இப்போது ஒவ்வோரு ராசி அன்பர்களுக்கு இந்த இராகு-கேது பெயர்ச்சி என்னென்ன பலன் தரும்? என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷ இராசி :  உங்கள் இராசிக்கு 12-இல் இராகு செல்வது நன்மையே. பலவிதமான கஷ்டங்கள் தீர்த்து வைக்கும். கைக்கு வர வேண்டிய கடன் வந்து சேரும். ஆறுக்குரிய சாரம் ஏறியதால் வம்பு வழக்கு தீரும். அதுமட்டுமல்ல, ஜென்மத்தில் இருக்கும் குரு, எதிர்பாரா யோகத்தை கொடுப்பார். ராசிக்கு 6-இல் அமரும் கேது பெருத்த பலனை செய்வார். அயல்நாட்டு பயணம், அயல் நாட்டில் வேலை வாய்ப்பு கொடுப்பார். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்னை தீர்த்து வைப்பார். உத்தியோக உயர்வு, கல்வி பட்டப்படிப்பு கொடுப்பார். இனி இராகு கேது பெரும் யோகத்தை கொடுப்பார்கள்.

ரிஷப இராசி : உங்கள் இராசிக்கு 11-இல் இராகு அமர்வது ராஜயோகம்தான். இதுவரை வழி தெரியாமல் தத்தளித்தவர்களுக்கு நல்வழி தெரிந்து விட்டது. இனி உங்கள் பயணம் தடையின்றி செல்லும். காசையே கண்ணில் பார்க்கவில்லை என்று பெருமூச்சு விட்டவர்களுக்கு பணப்பிரச்னை தீரும். மேலதிகாரியின் உதவி கிடைக்கும். உடல்நலப் பிரச்னை தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். 6-இல் இருந்த கேது இப்போது கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால் தெய்வ அனுகிரகம் கிடைக்கும். தடைப்பட்ட தொழில் புத்துயிர் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம் உண்டு.

மிதுன இராசி : உங்கள் இராசிக்கு 10-இல் இராகு அமர்வதால் தொழிலில் மந்தம் தட்டினாலும், கூட்டாளியால் மாறுபடும். படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய வீடு வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. 4-இல் அமரும் கேது எதிர்பார்த்த நன்மைகளை சற்று தாமதம் ஏற்படுத்தி கொடுப்பார். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போதும் அதிக வேகம் வேண்டாம். வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கவும். வீடு மாற்றம் கொடுக்கும். பேச்சில் நிதானம் தேவை.

கடக இராசி : உங்கள் இராசிக்கு 9-இல் இராகு அமர்கிறார். கடன் பிரச்னை அடியோடு தீரும். தந்தையின் உதவியால் பிரச்னைகள் விலகும். வழக்கு இருந்தால் வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் புகழும் அளவுக்கு வாழக்கை அமையும். அரசாங்க வழியில் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வியபாரத்தில் நல்ல மாற்றம் கொடுக்கும். சகோதர வர்க்கத்தில் மனகசப்பு நீங்கும். கேது மூன்றாம் இடத்துக்கு பிரவேசிப்பதால் புகழ் கீர்த்தி அதிகரிக்கும். சிறு சிறு பயணங்கள் அமையும். வெளிநாட்டவரால் தொழில் அமைய வாய்ப்பு வரும். மற்றவர்கள் முடியாது என்கிற விஷயத்தை நீங்கள் எளிதாக சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து தவிர்க்கவும்.




சிம்ம இராசி : உங்கள் இராசிக்கு 8-இல் இராகு அமர்கிறார். அஷ்டம ராகு என்பதால் பயம் இல்லை. இராகு தனாதிபதி சாரத்தில் அமர்வதால் வராத கடன் பாக்கியும் வசூல் ஆகும். வேலை வாய்ப்பு கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். சகோதரனால் நன்மை உண்டு. வழக்கு இருந்தால் வெற்றி கிடைக்கும். சொத்து விஷயத்தில் கவனம் தேவை. கேது இரண்டில் அமர்வதால் வீண் தகராறு ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வாய், தொண்டை பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். மிக மிக முக்கியம் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

கன்னி இராசி : உங்கள் இராசிக்கு 7-இல் இராகு அமர்கிறார். பயம் வேண்டாம். எதுவும் பெரிய அளவில் கெடுக்க மாட்டார் என்றாலும் சிலவற்றை எச்சரிக்கையுடன் அனுக வேண்டும். ஜென்மாதிபதி சாரத்தில் 10-க்குரியவன் சாரத்தில் வருவதால் தொட்டது துலங்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டு. புதிய தொழில் துவங்க வாய்ப்பு அமையும். படிப்பு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். தந்தையின் உடல்நலனை கவனிக்கவும். ஜென்மத்தில் இருக்கும் கேது நீங்கள் மிக மிக உஷாராக இருக்க வேண்டும் என்பதை சொல்கிறார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லா பிரச்னை உருவாகும். ஜாமீன் கையெழுத்து விவகாரங்கள் தலைவலி தரும். தேவையில்லாமல் அதிக கடன் வாங்க வேண்டாம்.

துலா இராசி : உங்கள் இராசிக்கு 6-இல் இராகு இருப்பது மிகவும் சிறப்பானது. எதிர்பார்த்த்து நடக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்கு குடி போவார்கள். வெளிநாட்டு பயணம் கிடைக்கும். தெய்வ அனுகிரகத்தால் திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். 12-இல் கேது இருப்பதால் உடல்நலனில் மிக மிக கவனம் தேவை. வழக்கு விவகாரம் தள்ளிக் கொண்டு போகும். கடன் சுமை அதிகரிப்பதால் தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். வாகன பயணத்தில் ஜாக்கிரத்தையாக இருக்கவும். வீண் பேச்சு வேண்டாம். உத்தியோக மாற்றம் உண்டு. சிலருக்கு அரசாங்க வேலை அமையும்.

விருச்சிக இராசி : உங்கள் இராசிக்கு 5-இல் இராகு இருப்பது சில நன்மைகளை செய்யும். பொதுவாக, அஷ்டமாதிபதி புதன் சாரத்தில் இருந்தால் ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்த வேண்டும். பணப்பிரச்னை தீரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகளும் தீரும். வேலை வாய்ப்பு வரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். தொழில் செய்வோருக்கு பண புழக்கம் உண்டாகும். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். தெய்வ அனுகிரகத்தால் கேது 11-இல் இருப்பதால் திருமணம் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். முக்கியமாக பேச்சில் கவனம் தேவை. எதிலும் அமைதியாக இருப்பது நல்லது.




தனுசு இராசி : உங்கள் இராசிக்கு 4-இல் இராகு இருப்பது சில நன்மைகள் தரும். பழைய வாகனம் மாறுதல் செய்வது, வீட்டில் ஏதேனும் மாற்றம் செய்வது போன்றவை அமையும். கல்வி, தொழிலில் தடை இருந்தாலும் நீங்கும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. வழக்கு விவகாரங்கள் ஏற்படும். கவனமாக இருக்கவும். ஆடம்பர செலவு ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். 10-இல் கேது இருப்பதால் கல்வியில் தடையில்லாமல் பார்க்க வேண்டும். சொத்து தகராறு ஏற்படும்.

மகர இராசி : உங்கள் இராசிக்கு மூன்றில் இராகு அமர்கிறார். நன்மை செய்வார். எதிர்பாரா வெற்றிகள் உண்டு. ஆபரணங்கள் சேரும். எதிர்காலம் உண்டா? என்ற கேள்விக்குறி மறையும். சகல தொல்லைகள் அகலும். நஷ்டபட்ட தொழில் லாபத்தை நோக்கி நகரும். தேர்வில் வெற்றி கிட்டும். குறிப்பாக மூன்றாம் இட ராகு, மண்ணையும் பொன்னாக்கும் அளவுக்கு யோகத்தை கொடுக்கும். இளைய சகோதரன் உதவி செய்வான். 9-ஆம் இடத்தில் உள்ள கேது, பாக்கியத்தை கெடுக்கப் பார்க்கும். தந்தையின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் படிக்காமல் கையெழுத்து போட வேண்டாம். வீண் செலவு வராமல் பார்த்துக் கொள்ளவும்.

கும்ப இராசி : உங்கள் இராசிக்கு இரண்டில் இராகு அமர்கிறார். எதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரும். எந்த உத்தரவாதம் இல்லாமல் பணத்தை யாருக்கும் நம்பி தர வேண்டாம். திரும்ப பெறுவது கடினம். வாக்கு சாதுர்யம் உண்டு. படிப்பில் நல்ல வெற்றி கிடைக்கும். பந்தய போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் ஆன இளம் தம்பதியினருக்கு புத்திர பாக்கிய அனுகிரகம் உண்டு. தெய்வ வழிபாடு, கோயில்களுக்கு செல்வது அதிகமாக இருக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் இது. எட்டில் கேது இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரோ செய்த தவறு உங்களை பழி சொல்லி பாதிக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் பிரச்னை இருந்தால் தீரும்.

மீன இராசி : உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் இராகு இருப்பதால் சட்ட ரீதியான பிரச்னைகள், தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு. எச்சரிக்கை தேவை. அரசாங்கத்தால் பிரச்னை ஏற்படும். இதுவரை சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்ற இயலாமல், அதனால் தேவையில்லாமல் பிரச்னைகள் உண்டாகும். குடும்ப வழக்கு விவகாரங்கள் பெரிய அளவில் பிரச்னையை கொண்டு செல்லும். 7-ஆம் இடத்தில் கேது இருப்பதால் மிக மிக கவனம் தேவை. சிலர் குடும்பத்தை விட்டு தனியாக வசிக்க நேரிடும். எதிலும் நிதானம் தேவை. தெய்வ அனுகிரகத்தால் 2-இல் உள்ள குரு காப்பாற்றினாலும், நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டும். 7-ஆம் இடத்தில் உள்ள கேது, உடல்நலனிலும், வாகனம் ஓட்டும்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

Read in ENGLISH

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Sep 20 2023. Filed under Astrology, Bhakthi planet, English, Headlines, Home Page special, இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »