சோமநாதர் கோயிலில் வழிபட்டார் இஸ்ரோ தலைவர்
எதிர்பார்த்தபடி பணியைச் செய்தது பிரக்யான் ரோவர்;
இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்.
வெராவல் : குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வெராவல் நகரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தூசு மற்றும் கருந்துளை வாயுக்களின் மேகப் கூட்டமான நெபுலா உள்ளிட்டவற்றை ஆராயும் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும்” என்று தெரிவித்த அவர், ”சந்திரயான்-3 திட்டத்தின் பிரக்யான் ரோவரை மீண்டும் தொடர்பு கொள்ளும் முயற்சி வெற்றி பெறவில்லை என்றபோதிலும், எதிர்பார்க்கப்பட்ட பணிகளை அது சிறப்பாக செய்து முடித்துள்ளது” என்றார்.
முன்னதாக அந்த மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத் தலமான சோமநாதர் கோயிலில் வழிபட்ட இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், ”கடவுள் சோமநாதர் அருளால் நிலவில் தரையிறங்கும் கனவு வெற்றியடைந்தது. அதனால்தான் இந்த கோயிலுக்கு வந்துள்ளேன். இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமென வழிபட்டேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.