Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

கிரகப்பிரவேச பூஜைக்கு வெள்ளைப் பசு | கிரகப் பிரவேச நுட்பங்கள் Part 4

G.Vijay Krishnarau

வாஸ்து நிபுணர் / Vastu Expert

முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

சொந்த வீடு இருக்கும் திசைக்கு பலன்

கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டின் திசையிலிருந்து 5, 7 அல்லது 9- நாள் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து, அங்கிருந்து கிரகபிரவேசம் நடக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதுவும், புதிதாக போக வேண்டிய இடமானது, கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டுக்கு வடக்கு, கிழக்கு, ஈசான்யம் (வடகிழக்கு) இந்த திக்குகளில் இருந்து பிரவேசித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று மனையடி சாஸ்திரம் சொல்கிறது.

இதில் கூறப்படுகிற அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்க முயன்றால் நல்லதுதான். ஆனால் நம் முன்ஜென்ம விதிகளின்படி இதில் எந்தளவு கடைப்பிடிக்க இயலுமோ அது மட்டும்தான் இயலும் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சிப்போம்.

பரிகாரம்

சரி, இங்கு நாம் இத்துணை விஷயங்களையும் கிரகப்பிரவேசத்திற்கு பார்த்தோம். இவற்றை முழுவதுமாக அனுசரிக்க முடியவில்லை என்றாலும் பரிகாரம் ஏதாவது நிச்சயம் இருக்கும் அல்லவா?. அது என்ன?.

ஆம். இதற்கு பரிகாரமும் இருக்கிறது. ஆனால் இதை நான் இங்கே சொல்லப் போவதில்லை. எல்லாவற்றுக்கும் குறுக்கு வழியை தெரிந்துக்கொண்டால் எப்படி?. நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு சாஸ்திர விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் அல்லவா?. அதனால், பரிகாரம் என்கிற குறுக்கு வழியை எந்த விஷயத்திலும் முதலில் தேடாதீர்கள், அதுதான் நல்லது. காரணம், இயற்கை அல்லது இறைவன் நம்மை பார்த்துக்கொண்டேதான், கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், பரிகாரத்திற்காக அடம்பிடிப்பவர்களுக்கு இரண்டே இரண்டு பரிகாரங்களை சொல்கிறேன். சொல்லப்போகும் இவ்விரண்டு பரிகாரங்களும், ஏதோ நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லப்போவாதில்லை. கீழ்காணும் பரிகாரங்கள் இரண்டுமே உண்மையில் மிகவும் பயன் உள்ளது – பலன் தரக்கூடியது.

அவை என்ன?

கிரகப்பிரவேசம் தினதன்று பசுக்களுக்கு அறுகம்புல் நிச்சயம் உணவாக அவற்றுக்கு தர வேண்டும். கிரகப்பிரவேசம் அன்று கோ பூஜை செய்வது மிக முக்கிய நிகழ்ச்சியாக இருந்தாலும், பசுக்களுக்கு பிடித்த உணவுகளை அள்ளித் தந்தாலும், அதற்கு அறுகம்புல் தர வேண்டியதை மட்டும் மறந்து விடாதீர்கள். கிரகப்பிரவேச தினத்தில் பசுக்களுக்கு அறுகம்புல் தராத கோ பூஜை, பூர்த்தியாகாது. இப்படி நாம் பசுக்களுக்கு அறுகம்புல் தந்தால் அது எத்தனை தோஷம் இருந்தாலும், அந்த தோஷங்கள் விலக வழி பிறக்கும். குடும்ப வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். அறுகம்புல்லின் குளிர்ச்சி, நமது புது வீட்டுக்கு புத்துணர்ச்சியும், அந்த வீட்டில் குடியிருக்கத் துவங்கும் குடும்பத்திற்கு மன மகிழ்ச்சியையும், தன-தானிய விருத்தியையும் உறுதியாக தந்திடும்.

சரி, இரண்டாவது பரிகாரம் என்ன?




வெள்ளைப் பசு

கிரகப்பிரவேசம் செய்யும் கோ பூஜை அன்று வெள்ளை நிறப் பசு கிடைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம். வெள்ளை நிறப் பசு அன்னை பார்வதி தேவியையும், ஸ்ரீமஹாலஷ்மியையும் குறிக்கிறது. வெள்ளைப் பசு கால்பட்ட்ட இடம் சொர்க்க பூமி. எல்லா வித துஷ்ட சக்தியையும் விரட்டி அடிக்கும். பேரருளை அள்ளி அள்ளி வழங்கும். அதனால் கிரகப்பிரவேச கோ பூஜைக்கு வெள்ளைப் பசு நம் வீட்டுக்கு வருவதும், அதற்கு நாம் மரியாதை செய்து அறுகம்புல் வழங்குவதும் உங்களை இந்திரனை போல வாழ வைக்கும்.

பொதுவாக மனையடி சாஸ்திரம் ஒரு விஷயத்தை இப்படி சொல்கிறது. நாம் வீடு கட்டபோகும் மனையில் வெள்ளை காளையுடன், வெள்ளைப் பசுவையும் நடக்கவிட்டாலே பாக்கியம். அதிலும் அந்த மனையில் தானியங்கள் பயிர் செய்து, அது விளைந்து நிற்கும் நேரத்தில், வெள்ளை காளையுடன், வெள்ளைப் பசுவையும் அழைத்து வந்து, விளைந்து நிற்கும் பயிரை மேயவிட்டால், கடுகளவு தோஷமும் அந்த மனைக்குள் நெருங்காது. யாருடைய பொறாமை கண்களும், தீய பலனை தராது. அந்த மனைக்கும், அதில் எழ இருக்கும் கட்டடத்திற்கும் என்னென்ன சௌகர்யங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவை அனைத்தும் தடையின்றி கிடைக்கும். வெள்ளைப் பசுவுடன் இணைந்து வரும் வெள்ளை நிற காளைக்கும் அந்தளவு மகத்துவம் இருக்கிறது. இவையே அந்த இரண்டு பரிகாரங்கள் ஆகும்.

ரொம்ப சந்தோஷம்…. அப்படியே மூன்றாவது பரிகாரமும் ஏதாவது இருந்தாலும் சொல்லுங்கள்.” என்று நீங்கள் கேட்பதற்குள் நிறைவு செய்கிறேன்.

எல்லாம் வல்ல சிவபெருமானால் சொந்த வீடோ, வாடகை வீடோ. இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் எங்கு வசித்தாலும் அனைவருக்கும் இன்பமான வாழ்க்கையும், நோய் நொடியற்ற மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமைய வேண்டிக்கொள்கிறேன். நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

நம சிவாய !

வாஸ்து தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி :

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 10 2023. Filed under Headlines, Home Page special, Vaasthu, Vaasthu, Vaasthu, Video, செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »