கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! | கிரக பிரவேச நுட்பங்கள் Part 2
G.Vijay Krishnarau
வாஸ்து நிபுணர் / Vastu Expert
முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பனவற்றில் ஒரு பகுதியை சொல்கிறேன். இவற்றை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதை நிச்சயம் சொல்வேன்.
கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்!
கிரகபிரவேசம் செய்யவும் அல்லது மனையில் வீடு கட்ட தொடங்கவும் உகந்த மாதங்களாக ஆறு மாதங்கள் உள்ளன. அவைமுறையே சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்கள் கிரக பிரவேசத்திற்கோ அல்லது மனையில் வீடு கட்ட தொடங்குவதற்கோ மிக உகந்த மாதங்களாக இருக்கிறது.
இதிலே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.
ஒரு மனையில் கட்டட வேலை தொடங்குவதற்கு மேற்சொன்ன ஆறு மாதங்களுடன் மேலும் இரண்டு மாதங்களும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவை, ஆடி மற்றும் மாசி மாதங்களாகும். இந்த இரண்டு மாதங்களும் சேர்த்து எட்டு மாதங்களும் கட்டடம் தொடர்பாக மனையில் வேலையை தொடங்க உகந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கிரக பிரவேசத்திற்கு ஆடி மாதமும், மாசி மாதமும் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
ஏன் ஆடி மாதத்தை தவிர்க்க வேண்டும்? என கேட்டால், ஆடி மாதத்தில் விஷ கிருமிகள், விஷ ஜந்துகள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டம். அதனால் தெய்வ வழிபாட்டில்தான் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற முக்கிய காரணம் சொல்லப்படுகிறது.
சரி, மாசி மாதம் ஏன் கிரகப்பிரவேசம் கூடாது? எனக் கேட்டால், மாசியில் இராவணன் மாண்டான் என்பதால், மாசி மாதத்தை தமிழர்கள் கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்ப்பார்கள். ஆக சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை ஆகிய ஆறு மாதங்கள் கிரகப்பிரவேசம் செய்யவும், மனையில் வீடு கட்ட தொடங்கவும் உகந்த மாதங்களாக இருக்கிறது.
கிரகப் பிரவேசத்திற்கு ஆகாத மாதங்கள்
கிரகப் பிரவேசத்திற்கு ஆகாத மாதங்களாக ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்கள் கூறப்பட்டுள்ளது. மேற்சொன்ன ஆறு மாதங்கள் கிரகப்பிரவேசத்திற்கு தவிர்க்க வேண்டிய மாதங்களாகும்.
கிரகப் பிரவேசத்திற்கு ஆகாத கிழமைகள்
கிரகப் பிரவேத்திற்கு ஆகாத கிழமைகளும் உண்டா? என்றால் உண்டு. ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக் கிழமை ஆகிய மூன்று கிழமைகளும் கிரகப் பிரவேத்திற்கு உகந்த கிழமைகளாக இல்லை. இதில் வியாழக் கிழமைக்கு இரண்டு கருத்துகளை மனையடி சாஸ்திரம் சொல்கிறது. அதாவது வியாழக்கிழமை கிரகப் பிரவேசம் செய்யக் கூடாது. ஆனால் வியாழக் கிழமை அதிகாலையில் குடிபுகுந்தால் இந்திரனை போல் வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதில்தான் குழப்பம் ஏற்படுகிறது.
பொதுவாக கிரகப் பிரவேசம் செய்த நாளில் அந்த வீட்டில் தங்குவது வழக்கம். காரணம், கிரகப் பிரவேசம் செய்த வீட்டை அன்றை இரவு ஆள் நடமாட்டம் இன்றி பூட்டி இருக்கக் கூடாது என்பது ஒரு ஐதீகம். வியாழக் கிழமை குடி புகுந்தால் நன்மை என்றால், வியாழக் கிழமை கிரகப் பிரவேசம் செய்தால் தானே அது சாத்தியம் என்று குழப்பம் நேரலாம். இதில் குழப்பம் எதுவும் இல்லை. வியாழக் கிழமை கிரகப் பிரவேசம் செய்ய உகந்த கிழமை இல்லைதான்.
அது எப்படி?
இதன் தொடர்ச்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்
வாஸ்து தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி : bhakthiplanet@gmail.com
வாஸ்து தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி :
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2023 bhakthiplanet.com All Rights Reserved