கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் | கிரக பிரவேச நுட்பங்கள் Part 1
G.Vijay Krishnarau
வாஸ்து நிபுணர் / Vastu Expert
கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்
காற்றையும் ஒளியையும் தடுக்காதே;
நோய்க்கு அழைப்பு கொடுக்காதே.
என்கிறது ஒரு வங்காளப் பழமொழி. மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் முதலில் அத்தியாவசிய தேவை தங்குவதற்கு இடம். தனியொரு வாலிபனாக இருக்கும்வரையில் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் தங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பஸ்தனாக ஆனபிறகு, தங்குகின்ற இடம் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பது நியாயமான காரணமாக இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே, அதாவது தன் வாலிப காலத்தில் இருந்தே தங்கும் இடம் தேடும்போதெல்லாம் ஒரு வழக்கம் வைத்திருந்தார்.
அது,
வாஸ்து பார்த்து தங்குவது.
இதை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும் ஆனால் நிஜம் இதுதான். அவர், வியபார விஷயமாக வெளியூர் சென்று தங்கும்போதெல்லாம் தன்னுடன் ஒரு திசைகாட்டும் கருவியை எடுத்துச் செல்வார். தங்குகின்ற அறையில் உறங்கும்போது, எந்த திசை பார்த்து படுத்தால் நல்லது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறதோ அந்த திசை நோக்கியே தலைவைத்து படுப்பது அவர் வழக்கம்.
அதேபோல, அவர் சாப்பிடும்போதும் வடக்கு நோக்கி சாப்பிட மாட்டார். வடக்கு நோக்கி சாப்பிடுவது நோய் நொடிகளை உண்டாக்கிவிடும், வடக்கு நோக்கி சாப்பிடுபவர் நோயாளி என்று வாஸ்து சாஸ்திரம் என்கிற மனையடி சாஸ்திரம் சொல்கிறது. ஆகா, மனையடி சாஸ்திரம் என்கிற இந்த வாஸ்து சாஸ்திரக் கலை, மனித வாழ்க்கைக்கு சின்ன விஷயங்களாக இருந்தாலும் அது, மனித சமுதாயத்திற்கு பயன்தரும் விதமாகவே சொல்லி இருக்கிறது.
நாம் வாழ்கின்ற வீடு அது வாடகை வீடாகவே இருந்தாலும் அதில், தேவைக்கு ஏற்ப சின்ன, சின்ன விஷயங்களை பார்த்து குடியேறுவது என்பது நன்மை தந்திடும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. வாடகை வீட்டில் இந்த சின்ன வாஸ்து விஷயங்கள் என்ன பெரிய நன்மையை தந்துவிடும் என்று விவாத விவகாரங்களில் இறங்காமல், மூட நம்பிக்கை என்றும் ஒதுக்கிவிடாமல், காசா பணமா?, ஏதோ நம் நன்மைக்கு தானே என்று நினைத்து செயல்படுத்த வேண்டும். பெரிய, பெரிய வாஸ்து மாற்றங்கள்தான் பலனை தந்திடும் என்பதுதான் மூட நம்பிக்கை. மனையடி சாஸ்திரத்தில் சின்ன விஷயங்கள் கூட பெரிய மாற்றத்தை தருவதுதான் இந்த சாஸ்திர கலையின் அற்புதம்.
மனையடி சாஸ்திரம் என்கிற இந்த வாஸ்து சாஸ்திர கலையில், மனை வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் எண்ணற்ற விஷயங்களை பேசினாலும், இந்த கட்டுரைப் பதிவில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமானது, “கிரக பிரவேசம்” பற்றிய சில முக்கியமான விஷயங்களை பற்றியதுதான். ஒரு கட்டடத்தின் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கக்கூடிய இந்த கிரக பிரவேசத்திலும் நுணுங்கள் நிறைய இருந்தாலும், அதில் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
இதன் தொடர்ச்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்
வாஸ்து தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி :
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
https://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
https://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2023 bhakthiplanet.com All Rights Reserved