Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao

குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம்.

பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட முடியாது. எந்த சக்திக்கும் குதிரை கட்டுப்படாது. இறைவன் அதற்கு அப்படியொரு சக்தி தந்திருக்கிறார். சாதாரணமாக குதிரை வளர்ப்பவர்கள் கூறுவார்கள், குதிரைக்கு சுழி உண்டு, அது சரியில்லை என்றால் அரசனையும் ஆண்டியாக்கிவிடும்.




அப்படிபட்ட குதிரையின் கால் குழம்பில் லாடம் அடிப்பார்கள். அந்த லாடம் தேய்ந்த உடன் புது லாடம் அடிக்கப்படும். அப்படி அடிக்கும்போது பழைய லாடத்தை எடுத்து வந்து நம் வீட்டு தலைவாசலின் மேல் ஆங்கில எழுத்தான யு வடிவில் அடித்துவிட்டால் எப்பேர்பட்ட செய்வினை, ஏவல், பில்லி சூன்யம் எல்லாம் செய்தவனுக்கே திரும்ப போய்விடும்.

இந்த விஷயம் நம்பக் கூடியதா? என கேள்வி எழலாம். ஆனால் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். ஆகவேதான் இதை சொல்கிறேன்.

பணம் ஆயிரக்கணக்கில் செலவு இல்லை. வெறும் பழைய குதிரை லாடம்தான். செய்வினை பாதிப்பு இருக்கிறதோ என்று கவலைப்படுபவர்கள் பழைய குதிரை லாடத்தை உங்கள் வீட்டுக்கு தலைவாசலுக்கு மேல் அடித்து பாருங்கள். அப்படி பலன் எதுவும் இல்லை என்றால் அதனை கழற்றி எடுத்து விடுங்கள்.

ஆனால் அது பலன் தரும் என்பது பலரின் அனுபவ உண்மை. ஸ்ரீதுர்காதேவி அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

Watch LIVE STREAM of this Post




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »