முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்
Written by Niranjana
முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார்.
முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் இந்த பிறவியில் நாம் பெரும் பாக்கியசாலி. முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களை அணிவித்து வணங்கினால் மிகவும் விசேஷமானது.
ஆடி கிருத்திகை அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றையாவது தரிசியுங்கள். இயலாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்கு சென்று வாசனை மலர்களை தந்து வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும். நாம் அனைவரும் முருகப்பெருமானை வணங்கி நலங்களும் வளங்களும் பல பெற்று வளமோடு நலமோடு கந்தன் அருளால் சிறப்பு பெறுவோம்.
கந்தனுக்கு அரோகரா – முருகனுக்கு அரோகாரா – வேலனுக்கு அரோகரா!
©bhakthiplanet.com All Rights Reserved