
Written by Niranjana 23.11.2018 கார்த்திகை தீபம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் சிறப்பை பற்றி தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய இந்த பஞ்சபூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள், மகான்கள் தோன்றினார்கள். திருவண்ணாமலை நெருப்பிற்கான தலம் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையே யார் தங்களில் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. […]

13.11.2018 அன்று கந்த சஷ்டி விழா! Written by Niranjana தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து சண்டை-சச்சரவு ஏற்படுவதையும் இதில் அசுரர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதையும் எண்ணி கவலை அடைந்தார் சுக்கிராசாரியார். தன் குலத்தில் பிறந்த அசுரர்களை மேலும் அசுர பலம் கொண்டவர்களாக மாற்ற முடிவு செய்தார். இதற்கு வழி தேடிய போது காசியப்ப முனிவரை பற்றி யோசித்ததார். காசியப்பர் முனிவர் அசுரர்களுக்கு தந்தையை போன்றவர். இந்த முனிவர் அசுரகுலத்தில் பிறந்தாலும் குணத்தில் சாந்த சொரூபி. மிக […]

Written by Niranjana ஆண் சக்தி இருந்தாலும் அந்த ஆணுக்கு, பெண் சக்தியும் துணை இருந்தால்தான் எடுக்கும் முயற்சி விரைவாக முடியும் என்பதால்தான் சிவபெருமான் சக்திதேவியை தமது இடது பாகத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதுபோலவே, திருமாலும் தன் மார்பில் ஸ்ரீமகாலஷ்மியை இடம் பெற செய்தார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அதுபோலதான், நரகாசுரனை வீழ்த்தியது கிருஷ்ணர் என்று பலர் நினைத்தாலும், சத்தியபாமாவால்தான் நரகாசுரனை வீழ்த்த முடிந்தது என்பது […]

Written by Niranjana “தீபாவளி அன்று என்னத்த சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு? காலையில குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா? என்றால் நிச்சயம் தவறுதான். பண்டிகை என்றால் என்ன? நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் […]

Written by Niranjana 06.11.2018 அன்று தீபாவளி பூமாதேவியின் மகனான நரகாசுரன், மக்களுக்கும், தேவர்களுக்கும், பெரும் தொல்லை தந்து வந்தான். இதனால் அவன் தரும் இன்னல்களில் இருந்து விடுபட ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினார்கள் தேவர்கள். இதனால் நரகாசுரனை வதம் செய்தார் பகவான். நரகாசுரன் மரணம் அடையும் சமயத்தில், “எனது புகழ் அழிந்துவிடக் கூடாது, அதனால் என் மரணத்தையும் ஒரு திருநாளாக மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டான். அசுரனின் தொல்லையில் இருந்து விடுதலை பெற்று, மக்கள் […]