Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

பயன் தரும் பக்தி தகவல்கள் !

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் அடுத்தவருக்கு சாப்பாடு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல் கூடாது. சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.

கற்பூர ஹாரத்தி – சூடம் காண்பித்தல் பற்றி ..

1. சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.

தொப்பிளுக்கு இரண்டு முறை காண்பிக்க வேண்டும்,

முகத்துக்கு ஒரு முறை,

கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று முறை காண்பிக்க வேண்டும்.

2. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

3. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

4. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்.

5.விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்.

6.விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்.

7.பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும்.

இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்கக் கூடாது.

கலசத்தின் அா்த்தங்கள்

1.கலசம்(சொம்பு) – சரீரம்.

2.கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு.

3.கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) – இரத்தம்.

4.கலசத்தின் மேல் உள்ள தேங்காய் – தலை.

5.கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை – சுவாசம்.

6.கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை – மூலாதாரம்.

7.கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு).

8.உபசாரம் − பஞ்சபூதங்கள்.

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்.

சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்.

வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்.

ஆனி – தேன்.

ஆடி – வெண்ணெய்.

ஆவணி – தயிர்.

புரட்டாசி – சர்க்கரை.

ஐப்பசி – உணவு, ஆடை.

கார்த்திகை – பால், விளக்கு.

மார்கழி – பொங்கல்.

தை – தயிர்.

மாசி – நெய்.

பங்குனி – தேங்காய்.

திருநீறு

திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.

அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

பெண்கள், வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )

கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

தெரிந்துக்கொள்வோம் ஐந்து (பஞ்ச) விஷயங்கள் !!

1.பஞ்ச கன்னியர்

அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம்

இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்

சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர்

தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்

கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர்

தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்

வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10.பஞ்சவர்ணம்

வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம்

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12.பஞ்சமூலம்

செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம்

பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம்

முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம்

சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி

அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.

17.பஞ்சசிகை

தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர்

பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்

காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள்

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்.

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »