Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ஸ்ரீரங்கனை எந்த நேரத்தில் எப்படி அழைப்பது?

நமது மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போதும், குழப்பமான நிலையில் தவித்திருக்கும் சூழ்நிலையிலும் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாடமாக மனதில் நிறுத்தி அதனையே ஆண்டாண்டு காலமாக கடைபிடித்தும் வருகிறோம்.

எங்கேயும் எப்போதும் இறைவனின் நாமத்தை உச்சரிக்கும்போது நமக்கு பயம் என்கிற இருள் நீங்கப்பெற்று நம்பிக்கை, அமைதி என்கிற அருள் வரமாக, உறுதியாக கிடைக்கப்பெறுவதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்கிற வாசகத்தின் பொருளில் இறைவனின் நாமமே முதன்மை பெறுகிறது.

அந்த வகையில் காக்கும் கடவுளான ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தை எந்த சூழ்நிலையில் எப்போது எப்படி உச்சரித்தால் நல்லது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மருந்துகள் உண்ணும் போது விஷ்ணு

படுக்கச் செல்லும் போது பத்மநாபா

திருமணம் நடைபெறும் போது பிரஜாபதி

யுத்த காலத்தில் சக்ரதாரி

பிரயாண காலத்தில் திரிவிக்ரமா

இறுதி காலத்தில் நாராயணா

கெட்ட சொப்பணம் கண்டால் ஸ்ரீதரா

சங்கட காலங்களில் மதுசூதனா

தனிவழிச் செல்லும் போது நரசிம்மா

நெருப்பினால் ஆபத்து உண்டாகும் போது ஜலசாயினே

தண்ணீரால் ஆபத்து நேரிடும் போது வராகா

மலை ஏறும்போது ரகுநந்தனா

வீதியில் நடக்கும் போது வாமனா

எங்கும் எப்போதும் மாதவா

என்னும் திருநாமங்களை உச்சரிக்கும் போது நற்பலன்கள் தவறாமல் கிடைக்கும் என சுலோகங்கள் சொல்லுகின்றன. இதனையே..

மாதவன் என்றென்று ஓதவல்லீரேல்

தீதொன்றும் அடையா ஏதம் சாராவே

என ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மொழியில் தெரிவிக்கின்றார்.

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »