சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்
சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி யூடியூப் பிரபலங்கள் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.
தமிழகத்தில் மிகப் பிரபலமான யூடியூப் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அஸ்ஸோசியேசன் எனும் குழுவாக போராட்டம் நடத்த உள்ளனர்.
‘நமக்கு அவசிய தேவையான தண்ணீர் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் போன்ற விஷயங்களுக்கு நாம் போராடித்தான் தீர்வை பெற முடியும். தற்பொழுது தொடங்கியுள்ள IPL போட்டிகளால் திசை திரும்பி விடாமல், அப்போட்டிகளை புறக்கணித்து இந்திய அளவில் இந்த பிரச்சனையை பற்றி பேச வைப்போம்’ என தங்களுடைய போராட்டத்தின் நோக்கம் பற்றி தெரிவித்து, யூடியூப் நட்சத்திரங்களான கோபி, சுதாகர், மாறன், RJ விக்னேஷ் ஆகியோர் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை எதிர் நோக்கி அழைப்பு விடுத்திருகின்றனர்.
நடிகர் சங்கம் போராட்டத்தைப் போலவே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருக்கும் இந்த போராட்டத்திற்கு தமிழக இளைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
© 2011-2018 bhakthiplanet.com All Rights Reserved