ஒரு ஆண்டில் 1 லட்சம் பணியாளர்கள் வெளியேறினர்; குறைகிறதா ஐடி மோகம்?
கடந்த 4 காலாண்டுகளில் அதாவது ஒரு வருடத்தில் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களில் இருந்து சுமார் 1,00,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக முக்கிய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களில் 19-20 சதவீத வெளியேற்ற விகிதம் மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. கடந்த 5 வருடங்களில் இதன் விகிதம் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இக்காலகட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களில் 150,000 பணியாளர்கள் இணைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மார்ச் 2015ஆம் ஆண்டின்படி இந்திய ஐடித்துறையில் 1 பில்லியன் டாலர் வருவாய் பெற வேண்டும் என்றால், 14,350 பொறியாளர்களை நிறுவனம் பணியில் அமர்த்த வேண்டும். 2003 ஆம் ஆண்டு இதன் அளவு 38000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்துறையில் ஆட்டோமேஷன் மற்றும் புதிய தொழில்நுட்ப வருகையால் பணியாளர்களின் நிலைப்பாடு நிறுவனத்தில் குறைவாக உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, அடுத்தச் சில வருடங்களில் ஐடி மோகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐடி நிறுவனங்களுக்குப் புதிய பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.