Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

“த்ரிஷா கல்யாணத்தை தடுத்து நிறுத்திய சில பெரிய மனிதர்கள்…” – அம்மா உமாவின் பேட்டி..!

Trisha-and-Her-Mother-Uma பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தும் நிறைவேற்ற முடியாத மசோதாக்கள்.. அடிக்கடி வெளிநாடு பறக்கும் பிரதமர், நேபாளத்தின் நில நடுக்கத்தில் 7500  பேர் மரணம்.. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்ப வழக்கு இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தமிழகத்தில் அனைவரையும் மண்டை காய வைத்திருக்கிறது. நடிகை திரிஷாவின் கல்யாணம் நின்று போன கதை.

என்ன காரணத்தினால் கல்யாணம் நின்று போனதென்று சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலும் பொதுமக்கள் தங்களது மண்டையை உடைத்துக் கொள்வதாக பரபரப்பாக வந்த செய்திகளையடுத்து இன்றைக்கு திரிஷாவின் அம்மா உமா, ‘சினிமா விகடன்இதழுக்கு அளித்த பேட்டியில் ஒரு நீண்ட விளக்கவுரையையே கொடுத்திருக்கிறார்.

உமா தன் பேட்டியில், “திரிஷாவின் திருமணம் சம்மந்தமா மீடியால அவங்கவங்க மனசுக்கு என்னவெல்லாம் தோணுதோ, அப்படி இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு வர்றாங்க. இது ஒரு சென்சிட்டிவ்வான விஷயம்.  அதனாலதான் இதுவரைக்கும் வாய் திறக்காம இருந்தேன்.

எல்லா பத்திரிகையிலேயும்  த்ரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்கறது வருணுக்கும், அவரது குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் கல்யாணத்தை நிறுத்திவிட்டார்கள்என்று தங்களுக்கு தோணுறதை எல்லாம் எழுதறாங்க. துளிகூட அதில் உண்மை  இல்லை.

த்ரிஷா சினிமாவுல நடிக்கிறார்னு தெரிஞ்சுதான் பொண்ணு பார்க்க வந்தாங்க(!).  த்ரிஷா சினிமாவுல நடிக்கறது அவங்க குடும்பத்தோட பெருமையாத்தான் நினைச்சாங்க. நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும்கூட நிறைய புதுப் படத்துக்கு த்ரிஷா தேதி கொடுத்து இருக்கிறது வருண் ஃபேமிலிக்கு நல்லாவே தெரியும்.   த்ரிஷா நடிக்கக் கூடாதுன்னு வருண் குடும்பத்தார் சொல்லி இருந்தால் நாங்கள் புதுப் படத்தை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டோம்.

த்ரிஷா திருமணம் நின்று போன விஷயத்துல பெரியவங்க பல பேர் சம்மந்தப்பட்டு இருக்காங்க. அது மட்டுமில்லே, இன்னும் நிறைய பேருக்கு இதில் தொடர்பு உள்ளது, அவர்கள் எல்லோர் மேலும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அதனால் எல்லாத்தையும் வாய் திறந்து பேச முடியாது, பேசறது நாகரீகம் கிடையாது. நாங்க ஏதாவது பேசிட்டால் மீடியால அதைப் பத்தி வேற மாதிரி திரிச்சு எழுதிடுவாங்க. அதனால அந்த பெரியவங்களோட மனசு காயப்படுறதுக்கு நாங்க காரணமா இருக்க விரும்பலை.

ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு வாழறது எந்த விதத்துல நியாயம்..? சில விஷயங்கள் சரிப்பட்டு வரலைன்னா பிரிந்து விடுவது பெட்டர். அதுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் மனக் குழப்பம்தான் வரும்.

எல்லாருக்கும் அவங்க அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதைத் தேடிப் போக வேண்டியதுதான். தற்போது திரிஷாவின்  கவனம் எல்லாம் புதியதாக ஒத்துக் கொண்ட படங்களின் மேல்தான் உள்ளது. அடுத்து கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்..என்று நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.

Posted by on May 11 2015. Filed under Headlines, கதம்பம், சினிமா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »