Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா?

guru bhagavan

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் எந்தெந்த இடத்தில் தனித்து (பிற கிரகங்களுடன் கூட்டணி இல்லாமல்) இருந்தால் என்னென்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, ஒரு புராண சம்பவத்தை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியை கண்டால் யாருக்குமே பிடிக்காது. அதுவும் நடப்பதை புட்டு புட்டு வைத்தால் கேட்பவர்களுக்கு கோபம் மண்டையில் சூர்ரென ஏறும். அப்படிதான் ஒருநாள் நாரதர், குருபகவானிடம், “நான் ஒரு கேள்வியை கேட்கிறேன் அதற்கு தாங்கள் ஜோதிட சாஸ்திரபடி கணித்து சரியான பதிலை சொல்ல வேண்டும் என்றார்.

கேளும்” என்றார் குரு பகவான்.

அன்னை பார்வதிதேவி இப்போது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் என்பதை கணித்து சொல்ல முடியுமா?” என்றார் நாரத முனிவர்.

Bhakthi Planetகிரக நிலைகளை கணித்த குருபகவான், “அன்னை இப்போது நீராடிக்கொண்டு இருப்பார்” என்று காலநேரத்தை ஜோதிட ரீதியாக கணித்து சொன்னார் பிரகஸ்பதி.

குருபகவானின் ஜோதிட திறமையை நாரதர் அறிந்திருந்த போதிலும், இந்த விஷயத்தை கொண்டு தன் பாணியில் ஒரு விவகாரம் செய்ய வேண்டும் என நினைத்தவர், குரு பகவான் கணித்து சொன்னவற்றை பார்வதிதேவின் தோழியிடம் சொன்னார் நாரத முனிவர். நாரதர் சொன்னவற்றை அன்னையிடம் சொன்னாள் தோழி.

இதை கேட்டு அன்னை பார்வதிதேவி கடும் கோபம் அடைந்து, நாரத முனிவரை அழைத்து, “நான் இந்த நேரத்தில் நீராடுவது உமக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டார்.

கலகம் செய்வதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது என்றென்னிய நாரதர், தமக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் குருபகவான்தான் சொன்னார் என்றும் இதற்கு அவரே பொறுப்பு எனவும் சொல்லிவிடுகிறார்.

இதை கேட்ட தேவி மேலும் கோபம் அடைந்து, குருபகManamakkal Malaiவானை அழைத்து, “பெண்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கணிப்பதுதான் உன் வேலையா?” என்று கேட்டார். அன்னையின் கடும் கோபத்தை கண்டு பதறிய குரு பகவான், “இல்லை தாயே நாரதர்தான், இந்த நேரத்தில் அன்னை பார்வதிதேவி என்ன செய்துக்கொண்டு இருப்பார்? என்று கணித்து சொல்ல முடியுமா என கேட்டார். ஒர் ஜோதிட ஆசிரியன் எதையும் மறைக்காமல் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் நானும் கிரகநிலைகளை ஆராய்ந்து சொன்னேன்.” என்றார் குருபகவான்.

எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது என்று சிந்திக்கின்ற சுய புக்தி இல்லையா உமக்கு? இனி நீ எந்த இடத்தில் தனித்து நிற்கிறாயோ அவ்விடம் கெடும்” என்று கோபத்தில் சபித்து விடுகிறாள் அம்பிகை.greensite

இதை கேட்ட குருபகவான் மனம் வருந்தி அம்பிகையிடம் மன்னிப்பு கோரினார். அதற்கு அன்னை பார்வதிதேவி, “செய்த தவறுக்கு நீ மன்னிப்பு கேட்டதால் உன்னை மன்னித்துவிடுகிறேன். ஆனால் கொடுத்த சாபத்தை ஈஸ்வரனாக இருந்தாலும் திரும்ப பெற முடியாது. அதனால் நீ தனியாக இருக்கும் இடம் பாழ்படும். ஆனாலும் உன் பார்வை பெருகிற இடம் கோடி புண்ணியம் பெரும்.” என்று ஆசி வழங்கினார்.

இதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில், “குரு பார்த்தால் கோடி புண்ணியம்குரு தனித்து இருந்தால் அபகீர்த்தி மெத்த உண்டு” (அந்தணன் தனித்து நின்றால் அபகீர்த்தி மெத்த உண்டு) என விதிக்கப்பட்டுள்ளது.

சரி,

குரு, ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த இடத்தில் தனித்து இருந்தால் என்ன பலன்? என்று இப்போது தெளிவாக அறியலாம்.

எந்தவொரு ஜாதகத்திலும் குரு தனித்து இருந்தால் அவ்வளவு நன்மை கிடையாது. 

ஜாதகத்தில் எந்த இடத்தில் குரு தனித்து நிற்கிறதோ அந்த வீடு பலவீனம் அடைகிறது.

உதாரணத்திற்கு –

லக்கினத்தில் குரு தனித்திருந்தால், உடல் நலனில் பாதிப்பு,

2-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், பொருளாதரத்தில் உஷார் தேவை.

3-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், இளைய சகோதர-சகோதரி வழியில் பிரச்னை.

4-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், உடல்நலம், வீடு-வாகனம் இவைகளால் பாதிப்பு.

5-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், புத்திர-புத்திரிகளால் தேவையில்லா பிரச்னை.niranjana channel

6-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், கடன், வழக்கு தொல்லைகள்.

7-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், தாய்-தந்தைக்கு பாதிப்பு. கூட்டாளிகளால் அவமதிப்பு.

8-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், விபத்து, எதிர்பாராத ஆபத்துக்கள். வழக்குகள், நிம்மதியின்மை.

9-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், சொத்து இருந்தும் அனுபவிக்க இயலாது.

10-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், உத்தியோகம், வியபாரத்தில் சஞ்சலம்.

11-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், மூத்த சகோதரி, பூர்வீக சொத்து பிரச்னைகள் ஏற்படும்.

12-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், முன்னேறுவது இறைவன் அருள்.

ஆகவே எந்தவொரு ஜாதகத்திலும் குரு தனித்து இருப்பது அவ்வளவு நன்மை இல்லை.

சரி,

இந்த பிரச்னைகள் குறைய வழி உண்டா? எனக்கேட்டால், ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பாருங்கள். 5-ஆம் வீடு பலம் பெற்று இருந்தால் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும்.

*******

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 24 2015. Filed under Headlines, Home Page special, ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »