பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்களில் சிசிடிவி கேமரா
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அவரது நிர்வாகத் திறமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி.
விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை துவக்கப்படும்.
ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்.
முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை.
பெரு நகரங்கள் சாட்டிலைட் ரயில்வே முனையங்கள் அமைக்கப்படும்.
4 பல்கலைக்கழகங்களில், ரயில்வே ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகள் அமைக்கப்படும்.
பட்ஜெட் அளவு 52% அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அதாவது இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவு ரூ.1,11,000 ஆக உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தடங்களில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் வேகம் மணிக்கு 110 கி.மீ-ல் இருந்து மணிக்கு 160 முதல் 200 கி.மீ.-வரைஅதிகரிக்கப்படும்.
நாடு முழுவதும் 3438 ஆள் இல்லா லெவல் கிராஸிங்குகளை ஒழிக்க ரூ.6,750 கோடி ஒதுக்கப்படும்.
108 ரயில்களில் இ-கேட்டரிங் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ரயில்களில் பயணிக்க முன் பதிவு செய்யும் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தங்கள் உணவுக்கான ஆர்டரையும் பதிவு செய்யலாம்.
குறிப்பிட்ட சில ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ரயில் புறப்படும், வரும் நேரம் குறித்து பயணிகள் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
சிமென்ட், யூரியா, இரும்பு உள்ளிட்ட 15 வகையான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புறநகர் ரயில்களிலும், குறிப்பிட்ட தடங்களில் செல்லும் பயணிகள் ரயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் வை-ஃபை சேவை வழங்கப்படும்.
பயணிகள் மேல் அடுக்கு படுக்கையில் சுலபமாக ஏற வசதியாக ரயில் பெட்டிகளில் மடக்கு ஏணி வழங்கப்படும்.
அனைத்து ரயில்களிலும் பொது வகுப்புப் பெட்டிகளிலும் மொபைல் சார்ஜர் வசதி செய்யப்படும்.
ரயிலில் பயணிக்கு பெண்கள் பாதுகாப்பான திட்டங்களுக்காக ‘நிர்பயா நிதி’ பயன்படுத்தப்படும்.
இனிமேல் 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.
9,400 கி.மீ பாதை இரட்டை வழி, மூன்று வழி, நான்கு வழி பாதைகளாக மாற்றும் வகையில் 77 புதிய திட்டங்கள் மேற்கொள்ள உத்தேசம்
பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒதுக்கீட்டில் 67% அதிகரிப்பு
முன் பதிவு செய்யாமல் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரயில் நிலையத்துக்குள் நுழையும் அடுத்த 5 நிமிடங்களுக்குள் ரயில் டிக்கெட்டை பெறுவதை உறுதி செய்யும் வகையில், ‘ஆபரேஷன் 5- மினிட்’ என்ற சேவை தொடங்கப்படுகிறது.