Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசிய 8 வயது சிறுவனிடம் விசாரணை

news worldபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி புகுந்த  தீவிரவாதிகள் பத்திரிகை ஆசிரியர், கார்டூனிஸ்ட் உள்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.  தொஅடர்ந்து பாதுகாப்பு படை நடத்திய  தாக்குதலில்  2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து நைஸ் நகரைச் சேர்ந்த பள்ளியில் ஒரு நிமிட மவுன கடைபிடிக்கபட்டது.

இதில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் பங்கேற்றனர். ஆனால், அந்தப் பள்ளியைச் சேர்ந்த 8 வயது மிக்க சிறுவன் ஒருவன் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவித்தான். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று ஆசிரை அறிவுறுத்தியும் சிறுவன் கேட்கவில்லை. மாறாக  தீவிரவாதத்துக்கு ஆதரவாலகருத்துக்களை வெளியிட்டு உள்ளான்.

இதனை அடுத்து சிறுவனின் போக்கு குறித்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சிறுவனின் ஆசிரியை கூறும்போது, “தாக்குதல் நடத்திய நபர்களுக்கு ஆதரவாகவே அச்சிறுவன் பேசினான். விளக்கம் அளித்த நிலையிலும் அவர் தனது கருத்திலிருந்து மாறவில்லை” என்றார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யாத நைஸ் நகர போலீஸார், சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் விசாரணையின் போது சிறுவனிடம், தீவிரவாதிகளுக்கு எதற்கு ஆதரவு தெரிவிக்கிறாய்? என்று கேட்டனர். அதற்கு அந்தச் சிறுவன் ‘நான் தீவிரவாதிகளுடன்தான் இருக்கிறேன்’ என்றார்.

தீவிரவாதிகள் என்றால் யார்? என்று கேட்டதற்கு, தெரியாது என்று கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் பேச்சால் விசாரணை நடத்திய போலீஸாரும் பள்ளி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது குறித்து பிரான்ஸின் அமைப்பு ஒன்று அளித்துள்ள அறிக்கையில்,”சிறுவனும் அவனது பெற்றோரும் ஜனவரி முதல் வாரத்தில் நடந்த சம்பவங்களால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவை அனைத்தும் சிறுவனின் ஆழ் மனதில் நிலைத்துள்ளது. இது தான் சிறுவனது பேச்சுக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் அளிக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

சிறுவனின் வழக்கறிஞராக ஆஜரான சபென் குஜ், விசாரணை குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள தகவலின்படி, நீ ஏன் அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை என்று விசாரணையின் போது கேட்டதற்கு “நான் தீவிரவாதிகள் பக்கம் இருப்பேன்” என்று சொல்லியிருக்கிறான். சரி, தீவிரவாதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு “எனக்கு தெரியாது” என்று பதிலளித்திருக்கிறான்.

Posted by on Jan 29 2015. Filed under உலக செய்திகள், கதம்பம், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »