சுவாரசியமான முயற்சிகள் கொண்ட ‘ராஜதந்திரம்’
ராஜா ராணி, குக்கூ, முண்டாசுப்பட்டி போன்ற நல்வெற்றிகளைத் தொடர்ந்து மேலும் தமிழ் சினிமாவின் நல்ல படங்களை கையில் கொண்டிருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தற்போது ‘ராஜதந்திரம்’ படத்தை உலகமெங்கும் வெளியிட உள்ளது.
களவு – மோசடி வியூக வகைமைத் திரைப்படமான, ‘ராஜதந்திரம்’ தனது புதுமையான முன்னோட்ட காட்சிகளால் (டீஸர் & ட்ரெய்லர்கள்) பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் முக்கியமன 6 கதாபாத்திரங்களை விளக்கும் வகையில் 6 பிரத்யேக முன்னோட்ட (டீஸர்கள்) காட்சிகள் மிகவும் நுட்பமாகவும், சாதுர்யமாகவும் திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப்பட்டது மக்களின் பெருங் கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் முதன்முறையாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்ட விளம்பர புத்தி ட்விட்டர், யு-டியூப் மற்றும் பல்வேறு சமூகதளங்களில் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பல சுவாரசியமான கன்னிமுயற்சிகள் ராஜதந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தயாரிப்பு நிறுவனங்களான வொய்ட் பக்கெட் புரொடக்ஷன்ஸ் மற்றும் சன்லேன்ட் சினிமாஸ் தங்களது கணக்கை இந்த சுவாரசியமான திரைப்படம் மூலம் துவங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கவுதம் மேனன் அவர்களும் படைப்பாக்க ஒருங்கிணைப்பு தயாரிப்பாளராக (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) ராஜதந்திரம் படத்தில் பங்காற்றியுள்ளார்.
பெருநகரை மையமாக கொண்டு களவு – மோசடி வியூக சினிமாவாக உருவாகியுள்ள ராஜதந்திரம் வஞ்சம், நகைச்சுவை, காதல் என பல்வேறு இழைகளை தொட்டுச் சொல்கிறது. பல்வேறு சாதுர்யமான வியூகங்கள் நட்பு, துரோகம், அன்பு, காதல் என விதவிதமான அடுக்குகளுடன் புதிய அலை திரைக்கதையால் ராஜதந்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. வீரா, ரெஜினா கேஸன்டிரா, அஜய் பிரசாத் மற்றும் புதுமுகமான தரூபுக்கா சிவா போன்றோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை A.G. அமித் இயக்கியுள்ளார்.
G.V. பிரகாஷ்குமார் காதல் மெல்லிசைப் பாடலை ராஜதந்திரம் படத்திற்காக இசையமைக்க படத்தின் பின்னணி இசையை சந்தீப் சவுடா கையாண்டுள்ளார். S.R.கதிர் திரைப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை சிறப்பாக செய்துள்ளார்.
“எங்களது முதல் தயாரிப்பான ‘ராஜதந்திரம்’ மூலமாக ஃபாக்ஸ் ஸ்டார் போன்ற பெரும் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதை எண்ணி பெருமையடைகிறோம். இந்த கைகோர்ப்பின் மூலம் பல்வேறு இடங்களிலிருந்து பெருவாரியான ரசிகர்களை சென்றடையும் வாய்ப்பு பெருகியுள்ளது. இது எங்களுக்கு பெரும் வரவேற்பும் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான படமாக மாறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது நன்றி” – செந்தில் வீராசாமி, வொய்ட் பக்கெட் புரொடக்ஷன்ஸ் ‘ராஜதந்திரம்’ மார்ச் 2015 துவக்கத்தில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.