Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

Simple Remedy (pariharam) for childless couples |வம்ச விருத்திக்கு எளிய பரிகாரம்!


astrology vamsamSri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

குடும்பம் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வம்சத்தை இன்னும் செழிப்பாக்க புத்திர பாக்கியம் வேண்டும். ஆண்டி முதல் அரசர்வரை ஏங்குவது புத்திர பாக்கியத்திற்காகதான். உதாரணத்திற்கு, தசரதர் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி புத்ர காமேஷ்டி யாகம் செய்த பலனால் நான்கு பிள்ளைகளை பெற்றார். இப்படி வசதிபடைத்த அரசர்கள் யாகங்களும் பல தர்மங்களும் செய்து பிள்ளை பாக்கியம் பெற்றார்கள். சரி, வசதி இல்லாமல் இருப்பவர்களால் இப்படிப்பட்ட யாகங்கள் செய்ய முடியுமா? இதற்கு எளிய பரிகாரம்தான் என்ன?

புத்திர பாக்கியம் ஏன் தடைப்படுகிறது?

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ம் இடத்தில் கேது, இராகு, சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால், பூர்வ புண்ணியம் தரும் இடம் பலவீனம் அடைகிறது. அவ்வாறு இருக்கும் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் தடைப்படுகிறது.

அல்லது 5-ம் இடத்தில் மேற்கண்ட கிரகங்கள் இருந்தாலோ 6,8,12-க்கு உரிய கிரகங்கள் சேர்ந்தாலோ ஆண்டவன் அனுகிரகமே.

பிள்ளை பேறு

குழந்தை பாக்கியம் பெற புத்திரஸ்தானம் என்கிற 5-ம் இடத்தில் சுப கிரகம் அமர்ந்து, அந்த கிரகத்தை குரு பார்த்தால் அருமையான பிள்ளைகள் பிறந்து பெற்றோர்க்கு பெருமை தேடி தருவார்கள்.

பேர் சொல்லும் பிள்ளை பிறக்க ஐந்தாம் இடம் சிறந்து இருக்க வேண்டும்.

விதியை மாற்றும் ஆற்றல் இறைவனுக்கு இருக்கிறது அல்லவா. அற்ப ஆயுள் கொண்ட மார்க்கண்டேயனின் ஆயுளை தீர்காயுளாக இறைவன் மாற்றினாரே இதில் இருந்து என்ன தெரிகிறது? நம் ஜாதகத்தில் உள்ள விதியை இறைவன் கருணை காட்டினால் நிச்சயம் நல்ல மாற்றம் உண்டாகும்.

சிலர் சொல்வார்கள், திருமணம் நடந்து ஐந்து  வருடத்திற்கு மேல் ஆகிறது,  இன்னும் வயித்துல ஒரு புழு புச்சி தங்கல என்று புலம்புவார்கள். இந்த புலம்பலை தயவு செய்து தவிர்க்க வேண்டும். “இல்லை, இல்லை” என்ற சொல்லை அதிகம் உபயோகப்படுத்தினால் எதுவுமே இல்லாமல்தான் போகும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு பத்து வருடம் கழித்து கூட புத்திர பாக்கியம் உண்டாகுகிறது.

விவசாயி தன் நிலத்தில் விதைப்பதோடு அவர் பணி முடிகிறது. விதைப்பதை அறுவடை செய்ய இறைவனின் கருணை வேண்டும். அதுபோலதான் புத்திர பாக்கியம் கிடைக்க இறைவனின் அனுகிரகம் தேவை. சரி இதற்கு என்னதான் பரிகாரம்?

பரிகாரம்

ஆடி மாதம் அம்மனுக்கு வளையல் அணிவியுங்கள். அம்மன் அணிந்த வBhakthi Planetளையலை பெண்கள் தங்கள் கையில் அணிந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். கர்ப்பவதியாக இருக்கும் அம்மன் கை நிறைய அணிந்த வளையல்களில் இரண்டு வளையல்களாவது பெற்று நீங்கள் உங்கள் கையில் அணிந்தால் அம்மனின் கருணை பார்வையால் நிச்சயம் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மும்மூர்த்திகள் வாசம் செய்யும் அரசமரம்

அரசமரத்தின் அடிப்பகுதியில் பிரம்ம தேவரும், நடுப்பகுதியில், ஸ்ரீமஹா விஷ்ணுவும் நுனிப்பகுதியில் சிவபெருமானும் வாசம் செய்வதால் அந்த அரச மரத்திற்கு சக்தி அதிகமாக இருக்கிறது.

ஆகவே அரச மரத்தை சுற்றினால் நிச்சயம் மும்மூர்த்திகளின் ஆசியால் புத்திர பாக்கியம் உண்டாகும்.  ஆனால் அரச மரத்தை பிரதஷிணம் (சுற்றுவதற்கு) கூட நேரம் இருக்கிறது. அதாவது சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணிவரை சூரியனின் சக்தியால் அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நல்ல சக்தி வாய்ந்ததாக இருப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும். அதற்கு மேல் அரச மரத்தில் இருந்து வரும் காற்று நன்மை தராது என்கிறது சாஸ்திரம்.

அதேபோல, நல்ல இசையை கேட்க வேண்டும், நகைச்சுவையான படங்கள் போன்றவற்றை பார்க்க வேண்டும். எப்போழுதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மற்றவர்களின் குழந்தைகளின் மேல் பாசமாக இருக்க வேண்டும். முடிந்தளவில் மற்ற குழந்தைகளிடம் விளையாட வேண்டும். இப்படி செய்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

இந்த மனமகிழ்ச்சியே தாய்மை அடைவதற்கு வழி செய்யும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »