Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

2015 – ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்

happy new yearSri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்களில் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும்.

கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் குறையும். ஆன்மிகம் வளரும். மேஷத்தில் சந்திரனும், மகரத்தில் செவ்வாயும் அமைந்து செவ்வாய், சந்திரனை பார்வை செய்வதால் சில அரசிBhakthi Planetயல் பிரமுகர்களுக்கு சோதனை கட்டமாகவும், இயற்கை சீற்றம் வரவும் வாய்ப்புண்டு. பொதுவாக கேந்திரத்தில் புதன், சூரியன் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்” அடைந்ததால், கல்விதுறை பெரும் முன்னேற்றம் அடையும். உணவு பொருட்களின் விலை கூடுதலாகும். அன்னியர்களின் அத்துமீறல் அடங்கிவிடும். இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான, எழுச்சியான புத்தாண்டாக இருக்கும்.

இந்த ஆங்கில புத்தாண்டு வியாழக்கிழமையில் பிறப்பதால், காலையில் முதலில் விநாயகரை வணங்குங்கள். அத்துடன் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவையும், குரு பகவானையும் பிராத்தனை செய்து வணங்குங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடுgreensite செய்யுங்கள். புத்தாண்டு தினத்தன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாக இருந்தால் நல்லது. காரணம், இனிப்பு தெய்வ வழிபாட்டுக்கு விசேஷமானது. அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் கிடைக்கும். அதேபோல மஞ்சள், குங்குமத்தையும் வாங்குங்கள். இல்லத்தில் மங்களங்கள் பெருகும்.

உங்கள் பிராத்தனை அனைத்தும் இந்த 2015-ம் ஆங்கில புத்தாண்டு வருடத்தில் நிறைவேறும். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இனி ஒவ்வோரு இராசி அன்பர்களின் 2015-ம் ஆண்டு பலன்களை பார்ப்போம். அத்துடன் ஒவ்வோரு இராசி அன்பர்களுக்கான தடைகளை நீக்கி நன்மமையை பெருக செய்யும் பரிகாரங்களை பற்றியும் அறியலாம்.

Mesha Rasi மேஷம் – மேஷ இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் உச்சம் பெற்ற குரு, 10-ம் இடத்தில் உச்சம் பெற்ற செவ்வாய், பாக்கியத்தில் புதன், சூரியன் அமைந்துள்ளனர். இந்த யோக பாவங்களால் வீடு, மனை அமையும். வாகனம் வாங்கவும் யோகம் பிறக்கும். புதிய ஜீவனம் தொடங்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும். 12-ம் இடத்தில் கேது இருப்பதால், தேவை இல்லா செலவுகளும் வரலாம். 6-ம் இடத்தில் இராகு இருப்பதால் பொறுமை, நிதானமாக செயல்பட வேண்டும். குடும்பாதிபதியை குரு பார்வை செய்வதால், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – வியாழன்தோறும் குருபகவானை வணங்கி வாருங்கள். மஞ்சள் நிறம் கலந்த ஆடையை வியாழக்கிழமையில் அணியுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Reshaba Rasi ரிஷபம்ரிஷப இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தில் குருவும், பாக்கியத்தில் உச்சம் பெற்ற செவ்வாயுடன் சுக்கிரன், 3-க்குரிய சந்திரன் 12-ம் இடத்திலும் அமைந்துள்ளார். எடுக்கும் காரியம் ஜெயம் ஆகும். தந்தை வழியில் யோகம் உண்டு. கடன் பிரச்னை தீரும். 8-ம் இடத்தில் சூரியன், புதன் இணைந்து அயல்நாட்டு வேலை வாய்ப்பும், தொழில் முன்னேற்றமும் தர வாய்ப்பளிப்பார். திருமணம் தடைகள் நீங்கும். வழக்கு இருப்பின் சுமுகமாக முடியும். ஜென்மத்தை சனி பார்வை செய்வதால், உடல்நலனில் கவனம் தேவை. கூட்டு தொழிலில் கவனம் தேவை. ஜாமீன், சாட்சி விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். அத்துடன் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் தயிர் சாதத்தை தானம் செய்யுங்கள். நீங்கள் அணியும் உடையில் பச்சை நிறம் கலந்த ஆடையை புதன் கிழமையில் அணியுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Methuna Rasi மிதுனம்மிதுன இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தனஸ்தானத்தில் உச்சம் பெற்ற குரவும், சப்தமத்தில் புதன்- சூரியன், லாபத்தில் சந்திரனும் இருப்பதால் அடித்தது யோகம். பணவரவு தாராளமாக இருக்கும். உங்கள் வாக்குக்கு வலிமை உண்டு. குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும். பட்டப்படிப்பு தொடரும். தடைபட்ட சில காரியங்கள் லாபமாக முடியும். விரோதங்கள் மறையும். மனைவியால் லாபம் உண்டு. திருமண பாக்கியம் கைகூடும். சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால், வாகன விஷயத்தில், பயணத்தில் கவனம் தேவை. 10-ம் இடத்தில் உள்ள கேது, குரு பார்வை பெறுவதால் படிப்படியாக முன்னேற்றம் உண்டு.

உங்கள் இராசிக்கான பரிகாரம் –  உளுந்தில் தயாரிக்கப்பட்ட இனிப்போ அல்லது உளுந்து வடையோ தானம் செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமான கோயிலில் உங்களால் முடிந்த கைங்கர்யம் செய்யுங்கள். வெளிர் சிகப்பு ஆடையை ஞாயிற்றுகிழமையில் அணியுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Kataka/Cancerகடகம்கடக இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜென்மத்தில் உச்சம் பெற்ற குருவும், 7-ம் இடத்தில் உச்சம் பெற்ற செவ்வாயுடன் சுக்கிரன் உள்ளார். இனி என்ன கவலை? உங்கள் வேலை அத்தனையும் அமோகமாக முடியும். பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதியின் பார்வை பெற்றதால், உங்கள் மனக்கவலை தீரும். பஞ்சமத்தில் சனி உள்ளதால், பிள்ளைகளின் திருமணம் அமோகமாக நடந்துவிடும். பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் கேதுவை, குரு பார்வை செய்வதால், “கோடீஸ்வர யோகம்” பெறுகிறது. இந்த ஆண்டு நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும் நேரம் இது. யோகமான ஆண்டு.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – வெள்ளிக்கிழமையில் ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள். இல்லத்தில் நெய் தீபம் ஏற்றுங்கள். படிக்கும் ஏழை பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள். வெள்ளை, அல்லது வெளிர் பச்சை நிறம் கலந்த ஆடையை வெள்ளிக்கிழமையில் அணியுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Simha/Leoசிம்மம்- சிம்ம இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பஞ்சமத்தில் புதன்-சூரியன் இணைந்து, “புஷ்கல யோகம்” உண்டாகிறது. கை நிறைய காசுதான் கவலை வேண்டாம். 8-க்குரிய குரு, 12-ம் இடத்தில் இருப்பதும் ஒரு வகை யோகமே. 8-ல் கேது அமர்ந்து, குரு பார்வையை பெறுவதால் வழக்கு பிரச்னைகள் அத்தனையும் சூரியனை கண்ட பனிபோல் விலகி விடும். 10-ம் இடத்தில் சந்திரன்-செவ்வாய் பார்வை பெறுவதால், “சந்திர மங்கள யோகம்” அடைகிறது. வேலை வாய்ப்பு, உத்தியோகம் தேடி வரும். சுகஸ்தானத்தில் சனி உள்ளதால், வாகன யோகம் உண்டு. பேச்சில் மட்டும் சற்று நிதானம் தேவை. திருமணம் கைகூடி வரும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் –  முருகப்பெருமானை வணங்குங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வாய்கிழமையில் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் அன்னதானம் செய்யுங்கள்.  இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Kanni Rasi கன்னி – கன்னி இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கீர்த்தி ஸ்தானத்தில் சனியும், 4-ம் இடத்தில் புதன், சூரியனும், 11-ம் இடத்தில் குரு பகவானும் அமைந்துள்ளார். இனி என்ன வேண்டும்? உங்கள் திட்டங்கள் நிறைவேறும். வீடு, மனை அமையும். கடல் கடந்து போகும் பாக்கியம் கிட்டும். கல்வி தொடரும். அன்னியர் உதவிகள் கதவை தட்டும். துவண்டு போன தொழில் துளிர்விட்டு எழும். நோய் நொடிகள் நீங்கும். குழந்தை பாக்கியம் அமையும். கடன் சுமை குறையும். கூட்டு தொழிலில் இருந்தால் சற்று கவனம் தேவை. தேவை இல்லாமல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஜென்ம இராகு சற்று அலைச்சல் கொடுக்கும். வாகன பயணத்தில் நிதானம் தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – செவ்வாய் கிழமையில் துர்கை அம்மனுக்கு எழுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள். வெளிரான சிகப்பு, அல்லது மஞ்சல் நிறம் கலந்த ஆடையை உடுத்துங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் ஒரு ஏழை சுமங்கலி பெண்ணுக்காவது வஸ்திர தானம் செய்யுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Tula/Libraதுலாம் – துலா இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் இராசிக்கு 3-ம் இடத்தில் புதன்-சூரியன் இணைந்து, உங்கள் திறமையை அதிகரிக்கச் செய்வார்கள். அதனால் துணிந்து எதையும் செய்யும் தைரியம் உண்டாகும். சுகஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரகும், 7-ம் இடத்தில் சந்திரனும், 10-ல் குருவும் உள்ளதால், உடல்நிலையில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் சிறு பூசல் உண்டானாலும் அதை தவிர்க்க வேண்டும். புதிய தொழில் துவங்கும். உறவினர் விரோதம் வேண்டாம். அரசாங்க உதவிகள் கிடைக்கும். கடன் ஏற்படும் சூழ்நிலை உண்டு. வீடு கட்டுவதோ அல்லது புதுபிப்பதோ நடக்கும். நண்பர்கள் உதவிகள் நாடி வரும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த காரியத்திலும் அவசரம் கூடாது. பயணங்கள் விஷயத்தில் நிதானம் தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – வியாழகிழமையில் கொண்டை கடலை சுண்டல் தானம் செய்யுங்கள்.  உங்கள் வலது கையில் விரலில் வெள்ளி மோதிரம் அணியுங்கள். அல்லது கழுத்தில் வெள்ளி செயினும் அணியலாம். சிகப்பு, அல்லது பச்சை நிறம் கலந்த ஆடையை அணியுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Virchika Rasi விருச்சிகம் – விருச்சிக இராசி அன்பர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம இராசியில் சனி பகவானும், தனஸ்தானத்தில் புதன்-சூரியனும், 3-ம் இடத்தில் செவ்வாய்-சுக்கிரனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அருமையான யோகத்தை கொடுத்தாலும், ஜென்ம சனி மன அமைதியை கெடுக்கிறது. 9-ம் இடத்தில் குரு இருப்பதும் நன்மையே. பொருளாதாரம் பெருகும். பணவரவு அதிகரிக்கும். திருமணம் நடக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், உறவினர் வருகை அதிகரிக்கும். மேற்படிப்பு தொடரும். புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் துவங்க நல்ல நேரம் இது. பஞ்சமத்தில் கேது இருப்பதால், தெய்வ தரிசனம் நன்மை தரும். ஜென்ம சனி உள்ளதால் பொறுமை அவசியம்.

உங்கள் இராசிக்க்கான பரிகாரம் – மாற்றுத் திறனாளிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சனிக்கிழமையில் புளி சாதத்தை தானம் செய்யுங்கள். கோயில்களில் நல்லெண்னை தீபம் ஏற்றுங்கள். வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கலந்த ஆடையை உடுத்துங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Dhanusu Rasi தனுசு – தனுசு இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜென்மத்தில் புதன்-சூரியன், பஞ்சமத்தில் சந்திரன், தனஸ்தானத்தில் செவ்வாய்-சுக்கிரன் அமைந்துள்ளதால் அருமையான ஆரம்பம் எனலாம். “தர்ம கர்மாதிபதி யோகம்” பெறுவதால், இனிப்பை தேடி எறும்பு வருவதை போல, உங்களை நாடி எல்லா நன்மையும் வரும். பட்ட கஷ்டங்கள் பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னை தீரும். சுப செலவு ஏற்படும். கடன் தீர வழி பிறக்கும். புத்திர பாக்கியம் உண்டு. வழக்கு இருந்தால் வெற்றி பெறும். 5-ம் இடத்தில் சந்திரன் அமர்ந்த நேரத்தில் உங்களுக்கு புத்தாண்டு பிறப்பதால் எண்ணங்கள் ஈடேறும். 8-ம் இடத்தில் குரு இருக்கிறார். அதட்டல், ஆர்ப்பரிப்பு கூடாது. அமைதி தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – திங்கட்கிழமையில் சிவபெருமானை வணங்குங்கள். வில்வ இலையை ஈசனுக்கு சமர்ப்பியுங்கள். ஏழை முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ரோஸ், அல்லது பொன்னிற ஆடை உடுத்துங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Magara Rasi --மகரம்மகர இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜென்மத்தில் செவ்வாய்-சுக்கிரன், 4-ம் இடத்தில் சந்திரன், 7.ல் குரு, 11-ம் இடத்தில் சனி பகவானும் அமைந்துள்ளனர். அருமையான வருடம். வாடகை வீட்டை காலி செய்து விட்டு சொந்த வீட்டுக்கு குடிப்போகும் யோகம் உண்டாகும். திருமணம் நடைப்பெற யோகம் உண்டு. மனைவியால் ஆதாயம் கிட்டும். வெளிநாட்டு வியபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். எதிர்பாரா உதவிகள் தேடி வரும். நோய் நொடி தீரும். இருப்பினும், சிலருக்கு சொத்து பிரச்னை வர வாய்ப்புள்ளது. உடன் பிறப்புக்கள் மூலம் சற்று மன அமைதி குறையலாம். கடன் தீர வழி பிறக்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – திருமணம் நிச்சயம் ஆன ஏழை கன்னி பெண்ணுக்கு உங்களால் முடிந்த பண உதவி செய்யுங்கள். பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். பானகம் தானம் செய்யுங்கள். இளம் பச்சை, அல்லது இளம் சிகப்பு வர்ணம் கலந்த ஆடையை அணியுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Kumba Rasi கும்பம் – கும்ப இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கீர்த்தி ஸ்தானத்தில் சந்திரனும், 10-ல் சனியும், 11-ம் இடத்தில் புதன்-சூரியனும் அமைந்த அற்புதமான வருடம் இது. இழுப்பறியாக இருந்த வழக்கு வெற்றி பெறும். புதிய தொழில் துவங்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். பெற்றோர் உதவி கிடைக்கும். பழைய கடன் வசூலாகும். விரோதியும் நண்பனாக மாறுவான். தாயாராலும், மனைவியாலும் நன்மை உண்டு. ஆபரணம் சேரும். கூட்டு தொழில் முன்னேற்றம் அடையும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். கல்வி தடை நீங்கும். பயணங்கள் அதிகரிக்கும். வாக்கு வன்மையால் சில காரியங்களை சாதித்து விடுவீர்கள். உடல்நலனில் கவனம் தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – ஞாயிற்றுகிழமையில் சூரிய பகவானுக்கு சிகப்பு மலர்களை சமர்ப்பியுங்கள். கோதுமையால் தயாரித்த இனிப்போ அல்லது உணவோ தானம் செய்யுங்கள். ஏழை முதியவர்ளுக்கு உங்கள் வசதிக்கு ஏற்ப உதவி செய்யுங்கள். மஞ்சள், அல்லது பிரவுன் நிறம் கலந்த ஆடையை அணியுங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Meena Rasi மீனம் – மீன இராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தனஸ்தானத்தில் சந்திரன், 5-ம் இடத்தில் குரு, 10-ல் புதன்-சூரியன், லாபஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரனும் அமைந்துள்ளார். அதிர்ஷ்டம் உங்கள் இல்லம் தேடி வரும். இனி எல்லாம் ஜெயமே. பண வரவு பெருகும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதிக்க செய்வார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் அமோகமாக நடைபெறும். சிறு தொழிலும் பெரும் தொழிலாக மாறும். நோய் நொடி பறந்து விடும். சொத்துக்கள் வாங்கும் நேரம் இது. கவலைகள் அத்தனையும் காற்றி பறந்து விடும். மற்றவர்கள் மெச்சும் வாழ்க்கை அமையும். தெய்வ அனுகிரகத்தால் சாதிக்கும் திறமை உண்டாகும். இந்த 2015, உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – ஏழைகளுக்கு வஸ்திரம் தானம் செய்யுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். அம்மன் ஆலயத்தில் தீபம் ஏற்றி வணங்குங்கள். ரோஸ், அல்லது சந்தன நிறம் கலந்த ஆடையை உடுத்துங்கள். இறைவனின் அருளாசியால் நீங்கள் எதிர்பார்த்த நல்ல எதிர்காலம் இந்த ஆங்கில புத்தாண்டில் அமையும்.

Read in ENGLISH Version

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »