பெங்களூரிலிருந்து தமிழகம் செல்லும் பஸ்களின் சேவை ரத்து
பெங்களூர்:
பெங்களூர் உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்துக்கு இயக்கப்படும் அம்மாநில அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பெங்களூரில் இருந்து ஒசூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு பகல் நேரத்திலும் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இரவு நேரத்திலும் பெங்களூரிலிருந்து கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு பாதகமாக வந்தால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதும் கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகம் இன்று அதிகாலை முதலே, தமிழகத்துக்கு இயக்கும் பஸ்களை ரத்து செய்துவிட்டது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து மதியத்துக்கு மேல்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல மைசூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளையும் ரத்து செய்துள்ளனர் அதிகாரிகள்.
தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு பாதகமாக வந்ததால், தமிழகத்துக்கு செல்லும் அனைத்து பேருந்துகளையும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் நிறுத்திவிட்டது. எனவே பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்வோரும், வருவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல கேரள மாநில போக்குவரத்துத்துறையும் தமிழகத்துக்கான பஸ்களை ரத்து செய்துவிட்டது