மோடிக்கு சம்மன் அனுப்பியது சிறுபிள்ளைத்தனமானது: இந்தியா கருத்து
நியூயார்க்,
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சையது அக்பரூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், குஜராத் கலவர வழக்கில் பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே நன்கு விசாரித்து குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை திசை திருப்புவதற்காகவே நியூயார்க் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேச தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.’ என்றார்.