தேர்தல் செய்திகள்!
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் அமைதியாக நடந்தது: 73 சதவீத ஓட்டுப்பதிவு. முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்!
தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக சென்னையில் தேர்தல் அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். அதிகபட்டசமாக தர்மபுரியில் 71% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு விடுமுறை விடாத நெல்லை சென்னை சில்க்ஸ் – சீல் வைப்பு;ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை!
ஐ.டி. நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு; சோழிங்கநல்லூரில் விடுப்பு வழக்காத 3 ஐ.டி நிறுவனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை; பணியில் இருந்த 3500 ஊழியர்கள் வெளியேற்றம். அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர் தேர்தல் அதிகாரிகள்!
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்கு பதிவு தொடங்கியது. ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்!
நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் வாக்களித்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார்!
தமிழக முதல் -அமைச்சர் ஜெயலலிதா மத்திய சென்னை தொகுதியில் ஸ்டெல்லா மேரிஸ்கல்லூரியில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசியஜெயலலிதா தேர்தலுக்கு முடிவுக்கு பின் கருத்து தெரிவிப்பதாக கூறினார்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின்,கோபாலபுரத்தில் ஓட்டு போட்டார்கள்!
தென்சென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் இல கணேசன், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஓட்டு பதிவு மையத்தில் ஓட்டு போட்டார்!
கமலஹாசன், நடிகை குஷ்பு, ஃபாத்திமா பாபு ஆகியோர் தங்களது வாக்குகளை சென்னையில் பதிவு செய்தனர்!
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. பலபகுதிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்!
நடிகர் அஜித் – ஷாலினி திருவான்மியூர் குப்பம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் வாக்களித்தனர்!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது வாக்கை பதிவு செய்தார்!
விருதுநகர் தொகுதி கலிங்கப்பட்டியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் வைகோ!
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் சென்னை நந்தனத்தில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்!