Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: March, 2014

பலன் தரும் அபிஷேகங்கள்

Written by Niranjhana  இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும். சரி, இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். நல்லெண்ணெய் அபிஷேகம்:  மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும். […]

உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு: இந்தியர் சாதனை

மிக்ஸிகன்,மார்ச்.8 – உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு முறையை இந்திய கணினி நிபுணர் அனில் ஜெயின் கண்டுபிடித்துள்ளார். கான்பூர் ஐஐடி-யில் பி.டெக். படித்த அனில் ஜெயின், அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் பி.எச்டி மேற்படிப்புகளை முடித் தார். அதன்பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட்ட அவர் தற்போது மிக்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழு 3டி விரல்ரேகை பதிவு முறையை உருவாக்கியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, விரல் ரேகை பதிவை […]

மலேசிய விமானம் வியாட்நாம் கடலில் விழுந்து விபத்து என தகவல்

கோலாலம்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு 239  பேருடன் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியாட்நாம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளனது என தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில்  பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். 6.30 மணியளவில் பீஜிங் சென்றடைய  வேண்டிய விமானம்,    […]

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

சென்னை,= முதல் – அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் கடந்த 3-ந்தேதி 32 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். 8 படகு களையும் பறிமுதல் செய்து இருந்தனர். இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி உங்களுக்கு கடிதம் எழுதினேன். தற்போது பாக்ஜலசந்தி பகுதியில் மேலும் 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்   சிறை பிடித்து உள்ளனர். கடந்த 5-ந்தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை பிடித்து […]

பாகிஸ்தான் நடிகை சனா கான் கார் விபத்தில் பலி

இஸ்லாமாபாத், மார்ச் 8- பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை சனா கான், ஐதராபாத் அருகே நடந்த கார் விபத்தில் பலியானார். சனா கானும் அவரது கணவர் பாபர் கானும் நேற்று கராச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாபர் கான் ஓட்டிச் சென்றுள்ளார். ஐதராபாத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சனா கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பாபர், லியாகத் […]

கல்யாண ஆஞ்சனேயரை வணங்கினால் திருமண தடை விலகும்!

Written by Niranjana  அனுமனை வணங்கினால் தைரியம் வரும், தடைபடும் காரியங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அத்துடன் பால ஆஞ்சனேயர், வீர ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என்று ஆஞ்சனேயேரின் சிறப்புகளை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் ஆஞ்சனேயர் தன் மனைவியுடன் காட்சி தந்து, “கல்யாண ஆஞ்சனேயர்” என்ற சிறப்பு பெயர் பெற்றும் அருள்பாலிப்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்போது தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வரும்போது, அவர் உடலில் இருந்து வியர்வை கடலில் […]

சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசனின் உத்தம வில்லன் போஸ்டர்

உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது. விஸ்வரூபம் பாகம்-2 படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல் ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். சமீபத்தில் உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலைமையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையும் சேர்ந்து வந்துவிட்டது. உத்தம வில்லன் […]

பலாத்காரத்தால் கற்பிழந்தவர்களுக்கு மருத்துவ வசதி: புதிய நெறிமுறைகள்

நாக்பூர், மார்ச். 4- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விஞ்ஞானப்பூர்வமற்ற இரு விரல் சோதனையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டவருக்கு சோதனை மற்றும் மருத்துவ வசதி செய்து தரும் வகையில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இரு அறைகள் ஒதுக்கப்படவேண்டும். ஒன்றில் மருத்துவ பரிசோதனைக்கான வசதியும், மற்றொன்றில் தடவியல் சோதனைக்கான வசதியும் செய்து தர வேண்டும் என அனைத்து மாநில […]

டாக்டர் மீது போலீசார் தாக்குதல்: ஆக்ராவில் 200 மருத்துவர்கள் ராஜினாமா

லக்னோ, மார்ச்.4- உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் மருத்துவர்கள் போராட்டத்தால் அங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. தங்களது சக மருத்துவர் ஒருவரை போலீசார் தாக்கியதை கண்டித்து 200 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வான இர்பான் சோலங்கிக்கும் மருத்துவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த மருத்துவர் போலீசாரால் தாக்கப்பட்டார். மாநிலம் முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கான்பூரில் நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

99 மதிப்பெண் வாங்கியதால் ஆத்திரம் வயிற்றில் ஊசியால் குத்திக் கொண்ட சிறுவன்

சீனாவின் ஹெயில்லாங்ஜிங் மாகாணத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன். ஒரு நாள் சிறுவனை குளிப்பாட்டும் போது அவனது வயிற்றில் வீக்கம் இருந்ததை தந்தை கவனித்தார். அதைப் பற்றி சிறுவனிடம் கேட்டபோது, அவன் காயங்களை மறைத்துக் கொண்டு மழுப்பலாக பதிலளித்தான். ஆனால், அவனுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டான். இதையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையின் போது சிறுவனது வயிற்றில் 4 ஊசிகள் இருப்பது தெரியவந்தது. […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »