Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: February, 2014

முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

சென்னை, பிப்.7 – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று   காலை சந்தித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆந்திர மாநில பிரிவினை கூடாது என்ற தங்களின்  கருத்துக்கு ஆதரவு கேட்பதற்காக, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னைக்கு நேற்று  வந்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று   பகல் 11.50 மணிக்கு ஆந்திர மாநில […]

குருவாயூர் கோவிலில் ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்தி மகள் சவுந்தர்யா வழிபாடு

ரஜினியின் 2–வது மகள் சவுந்தர்யா. இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கோச்சடையான் படம் வெளியாவதை தொடர்ந்து சவுந்தர்யா நேற்று கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், கோவிலின் பிரதான நேர்ச்சையான துலாபாரம் நேர்ச்சையும் அளித்தார். இதில், ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்துவதாக வேண்டிக் கொண்டார். […]

திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: நயன்தாரா

நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது. நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:– இது கதிர்வேலன் காதல் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். பவித்ரா என்ற நடுத்தர குடும்பத்து பெண்ணாக வருகிறேன். ரொம்ப ரசித்து நடித்துள்ளேன். அனாமிகா படத்திலும் நடிக்கிறேன். இது இந்தியில் வந்த கஹானி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் கதையில் […]

அக்னி-5 ஏவுகணை அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும்: அவினாஷ்சந்தர்

புதுடெல்லி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5,500 கிமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்த அக்னி-5 ஏவுகணை, வளர்ச்சி சோதனைகள் நிறைவடைந்த பிறகு அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும் என்று  பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறுகையில், அக்னி-5 ஏவுகணை அடுத்த ஆண்டு இந்திய ராணுவத்தின் ஆயுத படையில் இணைக்கப்படும். வளர்ச்சி பணிகளை நிறைவு செய்ய இன்னும் இரண்டு […]

சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மிகப்பெரும் தவறு: உமாபாரதி

இந்தூர், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது மிகப்பெரும் தவறு பாரதீய ஜனதா துணைத்தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த சச்சின் தெண்டுல்கர், கடந்த நவம்பர் மாதம் 16–ந்தேதி ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் 40 வயது தெண்டுல்கருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.  இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு […]

தங்கம் மீதான வரியைக் குறைக்கும் யோசனை எதுவும் அரசுக்கு இல்லை: நிதி அமைச்சகம்

புதுடெல்லி, தங்கம் மீதான வரியைக் குறைக்கும் யோசனை எதுவும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சக அதிகாரி ஜெ.டி. சலீம் தெரிவித்துள்ளார். நடப்பு கணக்கு பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும என்பதை கருத்தில் கொண்டு குறைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்கம் இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் மறு சீராய்வு செய்யப்படும் செய்யப்படும் என்று மந்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கடந்த மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் […]

போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்

சென்னை, பிப்.7 – போலீஸ் உயர் அதிகாரிகள் 7 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.  இது குறித்து தமிழக உள்துறை இலாக்காவின் முதன்மை செயலாளர் அபூர்வவர்மா வெளியிட்டுள்ள அரசு ஆணை குறித்து கூறியிருப்பதாவது:_ சென்னை அமுலாக்கப்பிரிவில் ஜஜியாக உள்ள எஸ்.என்.சேசஷாயி, புதிய பதவியாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் துறையின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர ஆணையராகவும், டி.ஐ.ஜி.யாகவும் உள்ள என்.கே.செந்தாமரைக்கண்ணன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் துறைக்கு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள விஜேந்திர எஸ்.பிதாரி, மதுரை மாவட்ட […]

ரிலையன்ஸுக்குக் கொடுத்த நிலத்தை திரும்பப் பெற அரியானா அரசு முடிவு

ஹரியானா அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்த நிலத்தை இன்று திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் விரிவாக்கத்தின் போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 1,383 ஏக்கர் நிலத்தை தொழில் வளர்ச்சிக்காகக் கொடுத்தது அரியானா மாநில அரசு. கர்காவ்ன் அருகே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அரசு அளித்த இந்த நிலத்தை திரும்பப் பெறுவதென அரியானா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

கமல் படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா நீக்கம்…?

’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். ‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். உத்தம வில்லன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக யுவனுக்குப் பதில் ‌ஜிப்ரானை இறக்கியிருக்கிறார் […]

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 10,11ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.. இவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி, கடந்த 20, 21ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.. இதனிடையே மத்திய தொழிலாளர் நல ஆணையர், வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »