சிங்கப்பூர், பிப். 17- சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 43 அதிகாரிகள் தாக்கப்பட்டனர். 24 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு இந்தியருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவை மீறி கலைந்து செல்ல மறுத்ததால் இவருக்கு 15 வாரங்கள் ஜெயில் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்ற அந்நபரின் பெயர் சிங்காரவேலு விக்னேஷ் […]
புதுடெல்லி, பிப். 17- “வீடுகள் இல்லாதவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஆதார் என்ற தனித்துவ அடையாள அட்டை அதிகாரமளிக்கும் கருவியாகும்” என மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றிய உரையில் ஆதார் குறித்து மேலும் கூறியதாவது:- ஆதாரை குறை சொல்பவர்களும் கூட அது ஒரு அதிகாரமளிக்கும் கருவி என்று உணர்ந்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கடந்த ஆண்டு சமையல் எரிவாயுவிற்கான மானியம் நேரடியாக ஆதார் அட்டையின் […]
மொபைல் போன்கள், கார்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைவதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.அதனால் அவற்றின் விலைகள் குறையும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மொபைல்களுக்கான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் போன்கள் மீதான இறக்குமதி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைகின்றன. இதனால், மொபைல் போன்களின் விலைகள் குறைகின்றன. மேலும், சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மீதான […]
லக்னோ வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாளுகின்றன. உத்தரபிரதேசத்தில் அரசியல்கட்சிகள் பாலிவுட் நடிகைகளை ஆடவைப்பது மற்றும் கவர்ச்சி நடிகைகளை கொண்டு ஆபாச நடனங்களை ஏற்பாடு செய்வதும் வாடிக்கையாகி விட்டது சமீபத்தில் சமாஜ் வாதி கட்சி தலைவர்கள் பாலிவுட் நடிகர் -நடிகைகளை கொண்டு பெரிய விழா நடத்தியது. கவர்ச்சி நடனம் நடைபெற்றது. மூலக்கோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பபிஜ்னோர் உள்பட தலைவர்கள் ஆபாச நடனத்தை கண்டுகளித்தனர். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஜோதிட […]
டமாஸ்கஸ், சிரியாவில் பேஸ்புக் இணையதளத்தில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் பேஸ்புகில் தகவல்களை பரிமாறிவரும் நிலையில் சிரியாவில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் இணைய தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். அது குற்றமாக கூறப்பட்டு ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பு அளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து […]
ஐதராபாத், பிப்.15– தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியுமான மறைந்த என்.டி. ராமராவ் மூத்த மகள் புரந்தேஸ்வரி. இவர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற இவர் மன்மோகன்சிங் மந்திரி சபையில் வர்த்த துறை இணை மந்திரியாக உள்ளார். தெலுங்கானா பிரச்சினையால் சீமாந்திராவில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து உள்ளது. இதனால் புரந்தேஸ்வரி காங்கிரசில் இருந்து விலக திட்டமிட்டு உள்ளார். காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் […]
லாகூர், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பகாவை நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் பஷீர் அகமது இவர் அதே பகுதியை சேர்ந்த இவர் நதீம் எனபவரின் 19 வயது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அப்பெண் மறுத்து விட்டார். இதனால் பஷீர் அகமது ஆத்திரம் அடைந்தார். அப் பெண்ணின் அழகை சிதைக்க முடிவு செய்தார். பின்னர் அவரது மூக்கை அறுத்து துண்டாக்கினார்.இதனால் ரத்த வெள் ளத்தில் துடித்த அப் பெண் […]
லண்டன், பிப். 15– இங்கிலாந்தை சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் பேகன். இவர் கடந்த 1992–ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர் தனது ஓரின சேர்க்கை நண்பர் ஜார்ஜ் டயர் என்பவரின் ஓவியத்தை வரைந்து இருந்தார். இந்த ஓவியம் லண்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முடிவில் இந்த ஓவியம் ரு.430 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவியம் 6 அடி உயரம் உள்ளது. அதில் ஜார்ஜ் டயர் உடலின் […]
நியூயார்க், அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன.இதனால் ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வாஷிங்டன், நியூயார்க், நியூ இங்கிலாந்து, விர்ஜீனியா மைனே உள்ளிட்ட பெரும்பாலான நகர மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் பனிககட்டிகளாக உறைந்துவிட்டன. ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினாவில் 4 லட்சத்து 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.1500 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை […]
சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவித்த நாளுக்குள் விண்ணப் பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விரும்புவோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க லாம். தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு […]