சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வைரமுத்து தமிழ்தான் பெரிது என்று உணர்வு பொங்கப் பேசினார். “என்னிடம் வரும் எல்லா இயக்குனர்களையும் நான் சமமாக மதிக்கிறேன். எல்லோருக்கும் பாரபட்சமின்றியே உழைக்கிறேன். பெரிய இயக்குனர்களுக்கு எப்படி உழைக்கிறேனோ அதே போலவே புதிய இயக்குனர்களுக்கும் உழைக்கிறேன்.(ஆனால் பாட்டுக்கள் மட்டும் ஏனோ வேறு வேறு குவாலிட்டியில் வந்துவிடுகின்றன. என்ன செய்வது ?) . இதில் பணம் பெரிதல்ல. தமிழ்தான் பெரிது. மணிரத்னம் ‘ராவணன்‘ படத்தை தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். ஹிந்தியில் […]
தஞ்சாவூர் தஞ்சை பெரியகோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும்பணி சிறப்பு பூஜைகளுடன் இன்று தொடங்கியது. 3 நிலைகளில் அமைக்கப்படும் இந்த தேரில் 231 சிற்பங்கள் பொருத்தப்படுகிறது. தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்படும் என சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத்தொடர்ந்து […]
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துகளை டிசம்பர் 21-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை ஒப்படைக்க வேண்டுமென்று திமுக எம்பி தாமரைச்செல்வன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை ரிசர்வ் […]
சிங்கப்பூர், டிச. 12– சிங்கப்பூரில் நடந்த பஸ் விபத்தில் புதுக்கோட்டை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரவேல் பலியானார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தமிழர்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை 27 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 5 தமிழர்கள் மீது […]
சென்னை, டிச. 12– சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் சாதி, மத மோதல்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதில் பங்கேற்று பேசியதாவது:– தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்து நேற்று நாம் […]
சென்னை, டிச. 12– வடபழனி 100 அடி ரோடு லோகநாதன் நகர் 1–வது தெருவில் நாவல் மூலிகை உணவகம் மற்றும் சித்த ஆயுர் வேத மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மேயர் சைதை துரைசாமி, கோகுல இந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு நாவல் மூலிகை உணவகம் மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவமனையை திறந்து வைக்கிறார்கள். முதல் விற்பனையை சென்னை அரசு பொது மருத்துவமனை […]
செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, இந்தியர்கள் 20,000 பேர் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான “ஒரு வழிப் பயணம்’ ஒன்றை “மார்ஸ் ஒன்’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் […]
புதுடெல்லி, டிச.12- வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]
சூர்யாவின் அடுத்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தில் சூர்யா தாடி வைத்தபடி நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு அடுத்தா மாதம் மும்பையில் துவங்க இருக்கிறதாம். அதற்கு அடுத்த ஷெட்யூல் ஹைதாராபாத்தில் நடக்க இருக்கிறதாம். படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட […]
அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது ‘தி பட்லர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம். யூஜின் ஆலன் என்கிற அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிகளின் சமையல்காரராயிருந்த சமையல்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். 1952லிருந்து 1986 வரை வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணியாற்றும் சிசில் என்கிற சமையல்காரப் பாத்திரமாக கதை விரிகிறது. இந்த சமையல்காரர் தனது வாழ்நாளில் பல முக்கிய ஜனாதிபதிகளுக்கு சமையல் பரிமாறுகிறார். வரலாற்றில் அமெரிக்கா எடுத்த பல முக்கிய முடிவுகளை அவர் தனது கண்களால் […]