மும்பை, இதய நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று மும்பையில் நடந்த சினிமா விழாவில் சச்சின் தெண்டுல்கர் உருக்கமாக பேசினார். சினிமா விழா இந்தியில் திரிவேதி, உட்சாவ் போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சேகர் சுமனின் மகன் இதய நோயால் மரணம் அடைந்தார். இதை மையமாக வைத்து சேகர் சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே ‘ஹாட்லெஸ்’. இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பை பிரபாதேவியில் உள்ள […]
புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அமெரிக்காவில் இந்திய துணை தூதராக உள்ள தேவயானி கோப்ரகடேவை கடந்த வாரம் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக அமெரிக்க போலீசார் கைது செய்து, ஆடையை கலைத்து சோதனையும் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, பாதுகாப்பு, சலுகைகள் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தது. டெல்லியில் அமெரிக்க தூதரகம் […]
லண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினர் இங்கிலாந்தின் வயதான தம்பதியாக உள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்கள் இந்த வாரம் தங்களது 88வது திருமண நாளை கொண்டாட உள்ளனர். கார்தாரி (101) அவரது கணவர் கராம் சந்த் (108) பிராட்போர்டு நகரில் வசித்து வருகின்றனர். அவர்களது மகன் பால் சந்த் அந்நகரத்தில் காஸ்டல் பப் ஒன்றை நடத்திவருகிறார். அவர்களுக்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற போது 1925ம் ஆண்டு டிசம்பர் மாதம் […]
மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தொடங்கி வைக்க தொடக்க விழாவுக்கு வருகை தந்திருந்தார் இளையராஜா. தமிழிசை ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்க வேண்டும் என்பது இளையராஜாவின் நீண்ட நாள் கனவாகும். அதை தியாகாராஜர் கல்லூரியினர் ஓரளவு பூர்த்தி செய்துள்ளனர். கு.ஞான சம்பந்தன் தலைமை தாங்க, தமிழ் ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவன், திரைப்பட இயக்குனர் சுகா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். “இங்கே அதிக அளவில் ரசிகர்கள் கூடியிருப்பதன் காரணம் […]
சென்னை மனைவி வேலைக்கு சென்றது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்த குற்றச்சாட்டு குறிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– மனைவிக்கு வேலை நான் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து, பல்வேறு அரசு பதவிகளை வகித்துள்ளேன். எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 26–5–2008 முதல் 5–8–2008 வரை பதவி வகித்தேன். இதன் பின்னர், தமிழ்நாடு […]