சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 64-வது பிறந்தநாளை சமீபத்தில் விமரிசையாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளில் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், பிறந்தநாளின் போது ரசிகர்கள் ஒட்டிய பேனர்களில் ஒன்று தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ரஜினி மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் வாக்குச்சாவடியில் நின்று ஓட்டுப் போடுவது போலவும், விஷ்ணுவும், விநாயகரும் வரிசையில் நிற்பது போன்று […]
சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்ழுழு கூட்டம் இன்று மதியம் 3மணிக்கு நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளதாகவும், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுக பாடுபடும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் வகுக்க, முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் தமிழகத்தின் […]
மும்பை, டிச. 19- மத்திய விவசாயத்துறை மந்திரி சரத்பவாரின் பகுதியான பாராமதியில் இன்று 3 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் புல்தானா பகுதியிலிருந்து பாராமதிக்கு குடிபெயர்ந்த 61 வயது பெண் தொழிலாளி லதா பகவான் கரே வெற்றிப் பெற்றார். பண்ணையில் கூலி வேலை செய்யும் அந்த பெண் சேலையணிந்துகொண்டு வெறும் காலுடன் ஓடி இந்த வெற்றியை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான், தினந்தோறும் காலையில் நடைப்பயிற்சி செய்வது […]
நியூயார்க், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே ஆடைகளை களைந்து சோதனையிடப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் தொலைபேசியில் பேசிய ஜான் கெர்ரி, இந்தியாவின் உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளை உணர்வதாகம், இந்த நடவடிக்கைக்கு வருந்துவதாகவும் கூறினார். மேலும் இந்த பிரச்சனையால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். […]
புதுடெல்லி, டிச. 19- மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை. இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமைச்சரவையின் […]
அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த், அப்புக்குட்டி மற்றும் பலர் நடிக்க, சிவா இயக்கியிருக்கும் படம் ‘வீரம்’. விஜயா நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு நாளைதான் (20-12-2013) நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே படத்தின் பாடல்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டதாம். இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் ‘வீரம்’ படத்தின் அதிகாரபூர்வமான இசை வெளியீடு நாளை ‘ரேடியோ மிர்ச்சி’ […]
புதுடெல்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானியை கவுரப்படுத்துவதற்காக, அவரை ஐ.நா. நிரந்தர பணிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அவருக்கு அமெரிக்க அரசின் முழுப் பாதுகாப்பு கிடைக்கும்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரி தேவயானி கோப்ரகடேவை(39), விசா விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசார் கைது செய்து மிகவும் மோசமாக நடத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க […]
ஒரு விதவைக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈட்டை, அவர் மறுமணம் செய்து கொள்வதால் மறுக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தர்மாதிகாரி அளித்த உத்தரவில், ஒரு விபத்தில் கணவரை இழந்த மனைவிக்கு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து, குழந்தை பெற்ற நிலையில், கணவர் இறந்து விடுவதால், அந்த குழந்தையை வளர்க்க வேண்டிய கடமை அப்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அதனால், அவருக்கு […]
கிளிண்டன், டிச.19- அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் […]