Sunday 8th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

கோடம்பாக்கம் பாலம் புதுப்பிக்கும் பணி: நவ.23 முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் புதுப்பிக்கும் பணி காரணமாக சனிக்கிழமை முதல் (நவம்பர் 23) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளதால் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அந்த மேம்பாலத்தில் இரு வழிகளிலும் செல்ல தடை செய்யப்படுகிறது.

இலகு ரக வாகனங்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிவரை பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படும். வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஆற்காடு சாலை லிபர்ட்டி சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ஸ்டேசன் வியூ சாலையில் சென்று ரெங்கராஜபுரம் மேம்பாலத்தை கடந்து பசுல்லா சந்திப்புக்கு வந்து வடக்கு உஸ்மான் சாலைக்கு செல்ல வேண்டும்.

அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, மகாலிங்கபுரம் மேம்பாலத்தின் கீழ்புறமாக சென்று பழைய வழித்தடத்திலேயே மீண்டும் செல்லலாம்.

வள்ளுவர் கோட்டத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, திருமலைப்பிள்ளை சாலையில் சென்று பசுல்லா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ரெங்கராஜபுரம் மேம்பாலத்தை கடந்து சக்கரபாணி தெரு, ஐந்து விளக்கு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி விஸ்வநாதபுரம் பிரதான சாலை வழியாக லிபர்ட்டி சந்திப்பை அடைந்து அங்கிருந்து பழைய வழித்தடத்திலேயே செல்லலாம்.

இதற்காக ரெங்கராஜபுரம் மேம்பாலம் இருவழிப்பாதையாக பயன்படுத்தப்படும். மகாலிங்கபுரம் மேம்பாலத்திலிருந்து தியாகராயநகர் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் ஹபிபுல்லா சாலையில் இடதுபுறம் திரும்பி சதாசிவம் சாலை வழியாக பசுல்லா சாலை சென்று ராகவையா சாலை வழியாக ரோகிணி சந்திப்பை அடைந்து, அங்கிருந்து தியாகராயநகர் செல்லலாம்.

மகாலிங்கபுரம் மேம்பாலத்திலிருந்து வடபழனி நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் ஹபிபுல்லா சாலையில் இடதுபுறம் திரும்பி சதாசிவம் சாலை வழியாக பசுல்லா சாலை சென்று ரெங்கராஜபுரம் மேம்பாலத்தை கடந்து, வலதுபுறம் திரும்பி சக்கரபாணி தெரு, ஐந்து விளக்கு சந்திப்பு, விஸ்வநாதபுரம் சாலை வழியாக ஆற்காடு சாலைக்கு செல்லலாம்.

மேட்லி சந்திப்பிலிருந்து வரும் மாநகர பஸ்கள், உஸ்மான் மேம்பாலம் நோக்கி வராமல் மேட்லி சந்திப்பு வலதுபுறம் திரும்பி, பர்கிட் சாலை, தணிகாசலம் சாலை, டாக்டர் நாயர் சாலை, வாணி மஹால் சந்திப்பு, திருமலைபிள்ளை சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் சென்று அங்கிருந்து இலக்கை நோக்கி செல்லாம்.

மேட்லி சந்திப்பிலிருந்து வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம் மேம்பாலம் நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் உஸ்மான் மேம்பாலம் வழியாக உஸ்மான் சாலை – பசுல்லா சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ரெங்கராஜபுரம் மேம்பாலத்தின் கீழ் “யூ’ வளைவு எடுத்து மீண்டும் வடக்கு உஸ்மான் சாலை வழியாக செல்லலாம்.

மேட்லி சந்திப்பில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் உஸ்மான் மேம்பாலம் வழியாக வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ரங்கராஜபுரம் மேம்பாலத்துக்கு சென்று, சக்கரபாணி தெரு, ஐந்து விளக்கு சந்திப்பு, விஸ்வநாதன் சாலை வழியாக லிபர்ட்டி சந்திப்பை அடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by on Nov 21 2013. Filed under செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »