இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இந்தியா சார்பில் யாரும் செல்லக்கூடாது என்று தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் லட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உலகம் […]
சீனாவை சேர்ந்த ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து புதிய சாதனை புரிந்துள்ளது. சீனாவின் புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ‘டி மால்’ நேற்று ஒரேநாளில் ரூ.50ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து புதிய சாதனையை புரிந்துள்ளது. ‘டி மால்’ தவிர வேறு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களை நிர்வாகிக்கும் அலிபாபா நிறுவனம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதியை ‘சிங்கிள்ஸ் டே’ என அறிவித்து, […]
பெங்களூர்:உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. சுமார் 6.3 கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் சர்க்கரை நோய் தாக்கம் குறித்து சர்வதேச நீரிழவுநோய் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 6.3 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் 5 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி, தனாதிபதியுடன் அதாவது 2-ம் அதிபதியுடன் இணைந்து, லக்கினத்திற்கு 2,5,7,9,11-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பஞ்சமாதிபதியுடன் அதாவது 5-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பாக்கியாதிபதியுடன் அதாவது 9-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, சுகாதிபதியுடன் அதாவது 4-ம் அதிபதியுடன் சேர்ந்து, 5-ல் அல்லது 9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். ஆனால் – லக்கினாதிபதி 3,6,8,12-ம் அதிபதியுடன் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. சந்திரனோடு சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2.5.9.11-ல் இருந்தால் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். சந்திரனை சூரியன் நேர் பார்வையாக பார்த்தாலும், தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை (நேர்பார்வை) பெற்றாலும் அந்த ஜாதகர்கள் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள்! மூக்கின் மேல் கோபம் யாருக்கு? லக்கினத்தை செவ்வாய் பார்த்தாலும் அல்லது லக்கினத்தில் செவ்வாய் […]
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழா முருகப்பெருமானின் 2–வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவுள் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 3–ந் தேதி யாக சாலை பூஜையுடன் […]
டெக்சாஸ்: திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம். காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை விரும்பும் மனிதர்கள், தங்களது சினிமா ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆரம்பகாலத்தில் வெறும் கேக்காக ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது. தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க திகில் பட […]
இந்திய சினிமா சரித்திரத்தில் முக்கியமான படங்களில் ஒன்று ஷோலே. இந்தியன் கமர்ஷியல் சினிமாக்களை ஷோலேக்கு முன் ஷோலேக்கு பின் என்று பிரிக்கலாம். ஷோலேக்கு பிறகு வெளிவந்த கமர்ஷியல் படங்களில் அப்படத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், ஹேமமாலினி, ஜெயா பச்சன் நடித்த ஷோலே 1975-ல் வெளியானது. இந்தியா முழுக்க வரவேற்பை பெற்ற இப்படத்தை 3டி-யில் வெளியிடுகிறார்கள். யுடிவி அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஷோலேயை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார். திரைக்கதை ஜாவேத் அக்தர், சலீம் கான். […]
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் மீட்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாக் நீரினை பகுதியில், மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவித் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 30 பேரும், அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும், இலங்கை கடற்படையால் […]
சென்னை, ஆவணப் பதிவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சார்பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இனி சொந்தக் கட்டிடம் நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய […]