Wednesday 27th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Archive for: November, 2013

உலக செஸ் சாம்பியன் சிப் போட்டியின் 4 வது சுற்றும் ட்ராவில் முடிந்தது .

உலக செஸ் சாப்பியன் சிப் போட்டியின் 4 வது சுற்றும் ட்ராவில் முடிந்தது. நேற்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் சிப் போட்டியும் ட்ராவில் முடிந்தது . போட்டியாளர்கள் இருவரும் தத்தம் 2 புள்ளிகள் எடுத்துள்ளனர். சென்னையில் தற்போது உலக செஸ் சாம்பியன் சிப் போட்டி நடந்து வருகிறது . இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆன்ந்தும் நார்வே நாட்டிலிருந்து வந்திருக்கும் மாக்னஸ் கார்ல்சென்னும் செஸ் போட்டியில் களம் இறங்கியுள்ளனர் . இந்த நான்காம் சுற்றில் ஆனந்த் வெள்ளைக் […]

விளையாட்டு துறையை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு

விளையாட்டு துறையை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்துவைத்த தமிழக முதலமைச்சர் 10 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஸ்குவாஷ் ஆடுகளம், திருவண்ணாமலையில் 57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கூடைப்பந்து விளையாட்டு அரங்கு,,, ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அரியலூரில் நீச்சல் குளம், கரூரில் விளையாட்டு வளாகம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லில் விடுதிகள் என,, 4 கோடியே 64 லட்சம் மதிப்பிலான […]

எவ்வளவு பணம் இருக்கிறது என்று கூறும் அலார கடிகாரம்

பொதுவாக அலார கடிகாரம் ஒருவரை தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்கு மட்டுமே பயன்படும். ஆனால் அமெரிக்காவில் ஒரு புதுமையான அலாரம் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரம்தான் உண்மையான விழிப்பை ஏற்படுத்தும் அலாரம் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்ன கூறும் என்றால்? உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது; எவ்வளவு பேர் உங்களை தொடர்ந்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்; இன்னும் எவ்வளவு நாளைக்கு நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; என்ற தகவல்களை தெரிவிக்கும். அதோடு சமூக வலைதளங்களில் உள்ள தகவல்கள், உங்களது […]

சனி கிரகத்தின் புதிய படத்தில், நீல நிற புள்ளிப்போல் தோன்றும் பூமி

சூரிய மண்டலத்தில் உள்ள சனி கிரகத்தின் புதிய படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இயற்கையாக சனி கிரகம் எந்த வண்ணத்தில் இருக்கிறதோ அதே வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சனி கிரகம் குறித்து, இதுவரை காணப்படாத காட்சிகள் கொண்ட ஒரு புதிய படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், சனி கிரகம் அதன் 7 சந்திரன்கள், வளையங்கள், பூமி, வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவை இயற்கையான வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. சனி கிரகம் […]

நடிகர் சிவாஜி சிலை தொடர்பான வழக்கு தள்ளிவைப்பு

சென்னை, நவ. 14 – நடிகர் சிவாஜிகணேசன் சிலை தொடர்பான  வழக்கை நீதிபதிகள் வருகிற 26_ந்தேதி தள்ளி வைத்தனர். சென்னை ஐகோர்ட்டில் சீனிவாசன் என்பவர் .மெரீனா கடற்கரை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் அந்த சிலையை அகற்ற  உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், […]

ஹங்கேரி : மூளைச்சாவடைந்த கர்பிணியின் வயிற்றில் வளர்ந்த குழந்தை

ஹங்கேரியில் கர்பிணி மூளைச்சாவடைந்த நிலையில், மருத்துவ உபகரணங்களின் உதவியோடு தாய் உயிரோடு இருக்கும் வகையில் கரு, தாயின் வயிற்றிலேயே வளர்க்கப்பட்டு பிரசிவிக்கப்பட்டுள்ளது. 15 வார கர்ப்பிணியாக இருந்த 31 வயது பெண், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச் சாவடைந்தார். ஆனால், பரிசோதனையில் அவரது வயிற்றில் இருந்த கரு ஆரோக்கியமாக இருந்தது. அந்த கரு 27 வாரங்கள் வரை தாயின் கருவறையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்த மருத்துவர்கள், சுமார் 3 மாதங்கள் மருத்துவமனையில் உபகரணங்களின் உதவியோடு […]

வங்கக் கடலில் புயல் சின்னம்

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. சென்னைக்கு அருகே 650 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிலை கொண்டிருப்பதால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.15) முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. சென்னையில் […]

சிவாஜி சிலையை அகற்றக் கூடாது: திரைப்பட இயக்குநர்கள் போலீஸ் கமிஷனரிடம் மனு

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் நடிகர் சிவாஜி சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கடந்த 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

மது பாட்டிலில் இந்து கடவுள்களின் படங்களால் சர்ச்சை

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா […]

உலகின் அரிய – பெரிய ‘ஆரஞ்சு வைரம்’

உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech