Tuesday 4th March 2025

தலைப்புச் செய்தி :

Archive for: November, 2013

அமெரிக்க சுகாதார மையத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கிய இந்திய மருத்துவர்

அமெரிக்கவாழ் இந்திய மருத்துவரான விஜய் சங்வி என்பவர் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்துள்ளார். இந்தத் தொகையானது மருத்துவர்கள் விஜய் மற்றும் குஷ்மன் சங்வி அறக்கட்டளை என்ற பெயரில் இதய ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெல்லோஷிப் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும். இத்தகைய நன்கொடை அறக்கட்டளை அமைப்பை சின்சினாட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை […]

கிரிக்கெட் இல்லாமல் சச்சினை நினைத்துப் பார்க்க முடியவில்லை – அஞ்சலி டெண்டுல்கர்!

தனது கணவர் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் இல்லாமல் பார்க்கப்போவதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று சச்சின் மனைவி அஞ்சலி தெரிவித்துள்ளார். “கடைசி ஒருமாதம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த ஓய்வு பெறும் நாளைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவோம். கிரிக்கெட் இல்லாத டெண்டுல்கரை நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது. டெண்டுல்கர் இல்லாமல் கிரிக்கெட் இருக்கலாம் ஆனால் கிரிக்கெட் இல்லாமல் டெண்டுல்கர் இல்லை” என்று அஞ்சலி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். “நான் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த நாட்களைப்பார்த்ததேயில்லை. […]

பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவு திறந்திருந்ததால் பயணிகள் அச்சம்

சவுதி அரேபியாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று விண்ணில் பறந்துக்கொண்டிருந்தப்போது அதன் கதவு சரியாக மூடப்படவில்லை என எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று சவுதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு ஐதரபாத் வழியாக மும்பைக்கு வர இருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தின் ஒரு கதவு சரியாக […]

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் லட்சக்கணக்கான மக்கள் வருகை

திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் உச்சக்கட்ட திருவிழாவான கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். மலையில் மகா தீபம் ஏற்றும் போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச […]

ரஜினியின் ‘கோச்சடையான்’ ஜனவரி 10–ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே […]

அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை போல் வீட்டை மாற்றிய ஆசாமி

டெக்சாஸ்: அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டை ரூ.1.5 கோடி செலவு செய்து வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லாங்வியூ என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோன் வாடோ (63). இவருக்கு லாரா (36) என்ற மனைவியும், வாலன்டினா (16), லாரா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் ரூ.1.5 கோடி செலவு செய்து ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். […]

கூகுள் தயாரிக்கும் ஓட்டுநர் இல்லாத கார்கள் .

இணைய உலகைக் கலக்கிவரும் கூகுள் நிறுவனமாது இலத்திரனியல் துறையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக தற்போது ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் இயக்கக்கூடிய இந்தக் காரில் 2 பேர் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் இதன் சோதனை முயற்சி ஒன்று அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இக்காரானது 2015 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

900 கோடி ரூபாய்க்கு விலைபோன ஓவியம்

அயர்லாந்தில் பிறந்து பிரிட்டனில் வசித்த பிரபல ஓவியர் வரைந்த ஓவியம் சுமார் 900 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான் அவரது நண்பர் லுகியன் பிராய்டை 1969 ஆம் ஆண்டு மூன்று கோணங்களில் படம் வரைந்தார். மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் ஓவியர் பேகானின் தலைச்சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஓவியம் ஏலம் விடுவதற்காக நியூயார்க் ஏல மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக 85 மில்லியன் டாலருக்கு விற்கும் என்று […]

சச்சினின் கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 182க்கு ஆல் அவுட், இந்தியா 157\2

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வாண்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியாகும். மேலும் இந்த போட்டியுடன்  சச்சின் ஓய்வு பெறவுள்ளதால்  அவரது ஆட்டத்தை காண ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது. டாஸ்  வென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆட தொடங்கியது . கெய்ல் 11 ரன்களுடனும், பிரவோ […]

சென்னையில் முதன்முதலாக 3 டி- புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய புதிய டப்பிங் தியேட்டர் ‘டான் ஸ்டுடியோ’: பாடகி எஸ்.ஜானகி திறந்து வைத்தார்

சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில் ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆர்.ஜி.பி’ (RGB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ‘டான் ஸ்டுடியோ’வுக்குள் மூன்று பிரமாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. ‘டான் ஸ்டுடியோ’வின் உள் அமைந்த இந்த மூன்று […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »