கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது. Google Play for Education எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன்களை கிளவுட் முறையில் சக […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் வாக்கு ஸ்தானம் எனப்படும். இந்த 2-ம் இடத்தில் புதன் அமர்ந்து இருந்தாலும், 2-ம் இடத்தில் இருக்கும் புதனை சுபகிரகங்கள் எனப்படும் குரு, சந்திரன், சூரியன் பார்த்தாலும் அவர்கள் டி.வி. காம்பயர்களாக, ரேடியோ ஜாக்கிகளாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். 2-ம் இடத்தை புதன் பார்த்தாலும் பலன் உண்டு! மேலும் ஜோதிட கட்டுரைகள் இங்கே… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology […]
புதுடெல்லி, நவ. 16- கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை […]
புதுடெல்லி, நவ.16– டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 12.41 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.41 மணி வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 3.1 என இருந்தது. எனவே சேதம் இல்லை. தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் வீடுகள் லேசாக குலுங்கியதால் வீதிக்கு ஓடிவந்தனர். இதற்கிடையே இன்று அதிகாலை மீண்டும் டெல்லியிலும் காஷ்மீரிலும் நில […]
சபரிமலை, மண்டல–மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. அய்யப்பன் கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜையை முன்னிட்டு 41 நாட்கள், மகரபூஜையை முன்னிட்டு 20 நாட்கள் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் மண்டல – மகரவிளக்கு விழாவின் தொடக்கமாக நேற்று, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி என்.தாமோதரன் போற்றி குத்துவிளக்கு ஏற்றி நடையை திறந்தார். அப்போது கோவில் […]
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை கரையைக் கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது, சென்னைக்கு தென்கிழக்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை உச்சியில் இருந்த பாறை ஒன்று கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி அந்த பாறையை உடைத்து அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது. ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் மலை உச்சியில் உள்ள 2 டன் எடை கொண்ட ராட்சத பாறை […]
சென்னையில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5வது சுற்றில் நார்வே நாட்டு வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , நார்வே நாட்டின் கார்ல்சனுடன் விளையாடி வருகிறார். 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில் முதல் நான்கு போட்டிகளும் டிராவில் முடிந்தன. இந்நிலையில் முதல் வெற்றி யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு விடையாக நேற்று […]
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார்.ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கேமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது.‘விக்டோரியா’ (இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி) என்ற பெயர் கொண்ட அந்த […]
ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் கண்ணீருடன் பேசினார். அவர் கூறியதாவது 1999–ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார். அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு […]