சென்னை, நவ.18 – சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இரவில் சப்பாத்திகள் வழங்கும் திட்டம் இந்த வாரத்துக்குள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வழங்கப்படுகின்றன. மேலும் இந்த உணவகங்களில் ரூ. 3_க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும் என்று முதல்வர் […]
பாடகர் உன்னிகிருஷ்ணின் மகள் பாடகியாக களமிறங்கி உள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணின் மகள் உதாரா. 8 வயதே உடைய இவர் ‘சைவம்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் இந்த குட்டிப் பாடகி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ‘தலைவா’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் விஜய் இயக்கி தயாரித்து வரும் படம் சைவம். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் ‘தெய்வத்திருமகள்’ சாரா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் […]
சென்னை, நவ.18 – இடி – மின்னல் – மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக, 18.10.2013 அன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகைய்யா என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்; ஈரோடு மாவட்டம், […]
நியூயார்க், நவ. 18– அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லினாய்ஸ், இண்டியானா, கண்டக்கி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் கடுமையாக காற்று வீசியது. இதனால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகுப்புற வீசி அடிக்கப்பட்டன. சில இலகு ரக வாகனங்கள் காற்றில் பரந்தன. ‘டன்’ கணக்கில் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த சூறாவளி புயலுக்கு தாக்குபிடிக்க […]
சென்னை, நவ.18 – காற்றழுத்த தாழ்வு நிலை பரவியதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் நேற்று மதியம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. புயல் சின்னம் கரையை கடந்தபோது […]
ராய்ப்பூர், நவ.18– சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 11–ந்தேதி 12 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்தது. சுமார் 1½ லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு, அந்த முதல்கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவானது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்து விட்ட நிலையில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த 72 தொகுதிகளும் […]
ஊத்தங்கரை அருகே கோமாரி நோய் பாதிப்பால் 5 மாடுகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளதால் உரிய நடவடிககை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் கிராமத்தைதச் சேர்ந்த விஜயரங்கன் 6 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். இதில் 5 மாடுகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தன. அரசு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 மாடுகளும் உயிரிழந்தன. கோமாரி நோய் பாதிப்பால் மாடுகள் […]
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்தார். இதை நினைவுகூரும் வகையில் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகைதீப திருவிழா கடந்த 8–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சிகளாக 13–ந் தேதி வெள்ளிதேரோட்டமும், 14–ந் தேதி மகாதேரோட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் […]
நடிகர் “திடீர்’ கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த “திடீர்’ கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். “அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் முதன் முதலாக […]
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால நெய்யபிஷேகம் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை நடக்கிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக, கடந்த 15ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மகர விளக்கு பூஜை விழா டிசம்பர் 30ம் தேதி தொடங்கும். தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.விழாக்கால நெய்யபிஷேகம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. தினமும் காலை 11.30 வரை நெய்யபிஷேகம் […]