புதுடெல்லி, நவ. 19– முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவ – மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் திடீர் என்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கீழே தவறி விழுந்ததில் அவரது தலையின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் […]
லண்டன், நவ. 19– அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி பிரதேசமான அண்டார்டிகாவில் கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐஸ் கட்டிகளுக்கு அடியில் ஏதோ ஒன்று மெதுவாக கொழுந்து விட்டு எரிவதை அறிந்தனர். அதைத்தொடர்ந்து ரேடார் மூலம் அப்பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பனிக்கட்டிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் எரிமலையின் சிகரம் தெரிந்தது. அதற்குள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை இருப்பது தெரிய வந்தது. இந்த எரிமலை […]
சென்னை, நவ. 19- சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கார்ல்சன் 4.5-2.5 என முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், இருவருக்கிடையிலான 8-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், விஸ்வநாதன் ஆனந்த் கறுப்பு காய்களுடனும், கார்ல்சன் வெள்ளை காய்களுடனும் ஆடினர். வெற்றி நெருக்கடியுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் கடுமையாகப் […]
பாட்னா, நவ. 18- கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் நிகழ்த்திய சச்சின் தெண்டுல்கர், சமீபத்தில் 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் ஹாக்கி வீரர் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருதினை வழங்காமல் சச்சினுக்கு வழங்குவது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவானந்த திவாரி […]
சென்னை, நவ. 18- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 25-ம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. நந்தனம் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி மற்றும் காயிதே மில்லத் கல்லூரி ஆகிய இடங்களில் இப்பணி நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதங்கள் மற்றும் தேவையான படிவங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் […]
சென்னை, நவ. 18- உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில், கார்ல்சன் 4-2 என முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று 7-வது சுற்று போட்டி நடைபெற்றது. 2 சுற்றுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று வெள்ளை காய்களுடனும், கார்ல்சன் கறுப்பு காய்களுடனும் விளையாடினர். […]
சென்னை, நவ.18- நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன. இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது. இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து […]
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.9-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவ விபரம்: டிச.10-ம் வெள்ளி சந்திரபிரபை வாகன வீதிஉலா, 11-ம் தேதி தங்கசூரிய பிரபை வாகன வீதிஉலா, 12-ம் தேதி வெள்ள பூதவாகன வீதிஉலா, 13-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 14-ம் தேதி வெள்ளி யானை வாகன […]
அகமதாபாத்தில் சுமார் 7 லட்சம் பணமிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள ஒதவ் பகுதியின் சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் ரூ.7 லட்சம் பணமிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம்.மையத்திற்கு வந்து பணம் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை […]
ரஷ்யாவில் கஸன் விமான நிலையத்தில் தரை இறங்கிய போயிங் ரக விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம், ஊழியர்கள் 6 பேர் உட்பட 50 பேருடன் கஸன் நகருக்குச் சென்றது. இரவு 7.25 மணிக்கு கஸன் விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மூன்று முறை பத்திரமாக தரையிறக்க முயன்றும் முடியாததால், விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்த பயணிகள் […]