ஈரோடு:ஈரோட்டில் இருந்து நேற்றிரவு 7 மணிக்கு அரசு பஸ் காரைக்கால் புறப்பட்டது. நாகூரை சேர்ந்த குழந்தைவேலு (47) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ் ஈரோடு அரசு மருத்துவமனையை தாண்டியதும் டிரைவர் குழந்தைவேலு உடல்நிலை திடீரென மோசமானது. அவரது கை, கால்கள் செயல் இழந்தன. நிலைமையை உணர்ந்த குழந்தைவேலு மிகவும் சிரமப்பட்டு திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். நடுரோட்டில் பஸ் நின்றதால் பயணிகள், டிரைவரிடம் விசாரித்தனர். அதிர்ச்சியுடன் இருந்த டிரைவர் […]
வானத்தில், ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தோன்றியது, சீன மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.. சீனாவின் வடக்குப் பகுதியான, மங்கோலியாவில், வசிக்கும் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த அதிசய நிகழ்வை பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் சூரியனுக்கு பக்கவாட்டில், சற்று சிறிய அளவில் மேலும் 2 சூரியன்கள் காணப்பட்டன. அவற்றுடன் சூரியன்களுக்கு அருகில் வானவில்லும் தோன்றியது. இந்த காட்சியினை மங்கோலிய மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.. பூமியின் மேலடுக்கில், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தால், இதுபோன்ற தோற்றங்கள் […]
கடனை திருப்பித் தராதவரின் காதை கடித்து எடுத்துக் கொண்டு வருவார் நடிகர் செந்தில் ஒரு திரைப்படத்தில். அது போன்று விருத்தாசலம் அருகே உதவித் தொகை வாங்கித் தராததால் பஞ்சாயத்துத் தலைவரின் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர் ஒருவர். மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் பெயர் திரிசங்கு. இவர் வயது 55, 60 வயதானவர்களுக்கே முதியோர் உதவித் தொகை கிடைக்கும். ஆனால் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ரங்கநாதன் என்பவர் இவருக்கு உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி விண்ணப்பமும் […]
திருச்செந்தூர், நவ.4 – திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை–யுடன் தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கபட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 3.30 மணிக்கு காலசந்தி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், […]
அக்டோபர் 31 ஆரம்பம் வெளியான போதே மற்ற படங்களின் கலெக்சன் காலி. நவம்பர் 2ஆம் தேதி அழகுராஜா, பாண்டிய நாடு வெளியாக மற்றப் படங்கள் ஒரேயடியாக ஒட்டாண்டியாகிவிட்டன. நான்காம் ஐந்தாம் இடங்களைப் பற்றி பேச எதுவுமில்லை என்பதால் மூன்றிலிருந்து தொடங்குவோம். 3. பாண்டிய நாடு நவம்பர் 2ஆம் தேதி வெளியான படம் இரு தினங்களில் 38.12 லட்சங்களை வசூல் செய்துள்ளது. குறைவான திரையரங்குகளில் வெளியான காரணத்தால் இந்தளவு குறைந்த வசூலை பாண்டிய நாடு பெற்றுள்ளது. தீபாவளி படங்களில் […]
சென்னை, நவ. 4 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது குமரி கடலோர பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த […]
திருவள்ளூர்:பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது […]
Written by Niranjana முகவரி: அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி- நாகப்பட்டினம் மாவட்டம். கோவில் உருவான கதை நாகப்பட்டினத்தின் அருகில் பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவர் இருந்தார். இவர் சிறந்த முருகன் பக்தர். இவருடைய மனமும் நாவும், “ஓம் சரவண பவ” என்ற உச்சரித்து கொண்டே இருக்கும். அப்போது அவருக்கு ஒரு சமயம் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அழகான முருகன் சிலையை செதுக்கிகொண்டு இருந்தார் சிற்பி. அப்போது அந்த பக்கமாக […]