செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி […]
வெற்றி களிப்புடன் தாயகம் திரும்பிய ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடத்தை மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்கோரியாவில் உள்ள புஷன் நகரில் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆசிய பசிபிக் அழகிப்போட்டி நடைபெற்றது. 49 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த சிரிஷ்டி ரமணா முதல் இடத்தை பிடித்து சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் ஆசிய பசிப் அழகி ஹிமாங்கினி சிங் யாது […]
அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதராக பதவி வகிக்கும் நிருபமா ராவ்(62) தனது பணிக்காலத்தை நிறைவு செய்தார். கடந்த 40 ஆண்டுகளாக இந்திய வெளியுறவு துறை செயலாளர், சீனா மற்றும் இலங்கைக்கான உயர் தூதர் உள்ளிட்ட பதவிகளை வகித்த நிருபமா ராவ் பணிநிறைவையடுத்து அமெரிக்க வெளியுறவு துறை சார்பில் அவருக்கு வழியனுப்பு விழா விருந்து நடத்தப்பட்டது. இவ்விழாவில் சீனா, பிரேசில் உள்ளிட்ட பல நாட்டு தூதர்களும், அமெரிக்க வெளியுறவு துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். விருந்துக்கு நன்றி தெரிவித்து […]
தில்லியில் இன்று கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளானது. மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் வரும் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 20 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 4 ரயில்கள், பனிக்காலம் முடியும் வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க […]
உலக செஸ் சாம்பியன் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் உலக செஸ் சாம்பியன் போட்டியில் மோதுகிறார்கள். இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டி […]
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 12ஆம் தேதி முதல் கார்த்திகை உற்சவம் தொடங்குகிறது. இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கார்த்திகை உற்சவம் 12.11.2013 முதல் 21.11.2013 வரை நடைபெறுகிறது. உற்சவம் நடைபெறும் 10 நாள்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடிவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 17ஆம் தேதி (ஞாயிறு) திருக்கார்த்திகை அன்று திருக்கோயில் முழுதும் லட்சதீபம் ஏற்றப்படும். […]
சென்னை, நவ.6: சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை _ சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்_பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2_வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் […]
லாஸ்ஏஞ்சல்ஸ்:விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தபடி தனது 100வது பிறந்தநாளை கலிபோர்னியாவை சேர்ந்த தாத்தா ஒருவர் கொண்டாடியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா தென் பகுதியை சேர்ந்தவர் வீனன் மேனார்ட் (100). கார் வியாபாரியான இவர், வயது காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இவருக்கு தனது 100வது பிறந்த நாளை விமானத்தில் உயரமான பகுதிக்கு சென்று அங்கிருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தவாறு கொண்டாட வேண்டும் என்று வித்தியாசமாக ஆசை ஏற்பட்டது. இது குறித்து தனது […]
மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில், தானாக ஓடிய அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார். மூதாட்டி படுகாயமடைந்தார்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலைய பணிகள் கடந்த 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையாததால், லாரி பேட்டையை தற்காலிக பஸ்நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, நேற்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து, சின்னத்துரை கடற்கரை கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று விட்டார். அப்போது, அந்த பஸ் திடீரென தானாக இயங்கி […]
நியூ ஜெர்சி, அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வணிக வளாகம் நேற்று மூடுவதற்கு முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசாரும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வணிக வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் […]